தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தன் பயணத்தை துவக்கியவர் கருணாஸ். இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி கேரக்டரில் கருணாஸ் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது அட்டகாசமான காமெடி நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். குறிப்பாக மாஜிஸ்திரேட் வீட்டில் அவர் திருடும் காட்சி இன்றும் ரசிக்க வைக்கிறது.
நடிகர் கருணாஸ் அம்பாசமுத்திரம் அம்பானி திண்டுக்கல் சாரதி போன்ற படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்தார். இப்போது முக்குலத்தோர் புலிப்படை என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் உள்ளார். விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளராக போட்டியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நடிகர் கருணாஸ் மகன் கென் கருணாஸ் நெடுஞ்சாலை ரகளை போன்ற சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பிறகு வாத்தி அசுரன் விடுதலை 2 படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தார். இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக கென் கருணாஸ் பணிபுரிந்தாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கென் கருணாஸ் கதாநாயகனாக நடித்து அவரே இயக்குனராக அறிமுகமான படம் யூத். இந்த படம் கடந்த மார்ச் 19ம் தேதி வெளியானது. இந்த படத்தில் அனிஷ்மா வெஞ்சாரமூடு தேவர்தர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.
பள்ளி வாழ்க்கையை மையப்படுத்திய எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை ஆதரவை பெற்றது. குறிப்பாக படத்தில் இடம்பெற்ற முட்டக்கலக்கி உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் டிரண்டிங் ஆகி வைரலானது. முதல் படமே கென் கருணாஸூக்கு இயக்குனராக நடிகராக பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி வெளியான இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 10 கோடி என்று சொல்லப்படுகிறது. இந்த படம் வெளியாகி 30 நாட்கள் ஆன நிலையில் யூத் படத்தின் மொத்த வசூல் உலக அளவில் இதுவரை 82 கோடி ரூபாய் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.





