- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த திரைப்படங்கள் வந்த போதெல்லாம் சாதிய பிரச்சனை ஏற்படவில்லை - நடிகர் சரவணன் கண்டுபிடிப்பு...

இந்த திரைப்படங்கள் வந்த போதெல்லாம் சாதிய பிரச்சனை ஏற்படவில்லை – நடிகர் சரவணன் கண்டுபிடிப்பு…

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆண்டு தோறும் பல திரைப்படங்கள் வெளியானாலும், அதில் ஒன்று, இரண்டு திரைப்படங்கள் மட்டுமே பலராலும் ரசிக்கப்பட்டு பாராட்டப்படும். அதிலும், வெகுசில திரைப்படங்களே பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியாகி, கோலிவுட்டில் ட்ரெண்ட் செட்டரை ஏற்படுத்தும். அப்படி ஒரு வகையான திரைப்படம் தான் பருத்திவீரன்.

அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த திரைப்படத்தின் மூலம், கதாநாயகனாக சூர்யாவின் தம்பி கார்த்தி அறிமுகமானார். தனது திறமையான நடிப்பின் மூலம் முத்தழகு கதாபாத்திரத்தில் வாழ்ந்த பிரியாமணி, பருத்திவீரன் திரைப்படத்திற்காக தேசிய விருதைப் பெற்றார்.

மேலும் 90 களிலேயே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தாலும், பெயர் வெளிச்சம் கிடைக்காமல் இருளில் சிக்கித் தவித்த நடிகர் சரவணனுக்கு, பருத்திவீரன் திரைப்படம் சித்தப்பு என்னும் அந்தஸ்தை கொடுத்து கொண்டாடியது. இதன் பிறகு அவர் இன்று வரை எங்கு சென்றாலும், சரவணனை பலரும் சித்தப்பு என்றே அழைக்கின்றனர்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு சரவணனுக்கு கணிசமாக பட வாய்ப்பு கிடைத்தது. இந்த சூழலில், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றார் சரவணன். அங்கு அவர் அடித்த கவுண்டர்கள் அனைத்தும், மீம் கிரியேட்டர்களுக்கு டெம்ப்ளேட் ஆக மாறியது. இது ஒரு பக்கம் இருக்க, கோலமாவு கோகிலா உள்ளிட்ட திரைப்படங்களில் கவனம் செலுத்திய அவர், தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திலும் நடித்திருக்கிறார்.

சரவணன் தனது முதல் மனைவியை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்ததாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து அவரது முதல் மனைவியும் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த சூழலில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சரவணனிடம், நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவனின் வீட்டிற்குள் புகுந்து, சக மாணவர்கள் சாதிய வன்மத்துடன் அரிவாளால் வெட்டியது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதில் கூறிய நடிகர், சின்ன கவுண்டர், தேவர் மகன் திரைப்படங்கள் எல்லாம் வெளியானபோது இந்த மாதிரியான சாதிய பிரச்சனைகள் ஏற்படவில்லை என்று கூறினார். மேலும் இன்றைய காலத்தில் ஊடகங்கள் அதிகரித்து விட்டதால் கிராமங்கள் வரைக்கும் செய்திகள் சென்று அடைவதாகவும், அதனால் ஏற்படும் விளைவு தான் இது என்றும் கூறியிருக்கிறார். நாங்குநேரி சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், நடிகரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சற்று முன்