- Advertisement -
Homeபொழுதுபோக்குவசூலில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கேப்டன் பிரபாகரன் - 10 நாட்களில் வசூல் இத்தனை கோடிகளா?...

வசூலில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் கேப்டன் பிரபாகரன் – 10 நாட்களில் வசூல் இத்தனை கோடிகளா? உற்சாகத்தில் விஜயகாந்த் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991ம் ஆண்டில் வெளியான படம் கேப்டன் பிரபாகரன். இது அவரது 100வது படம். இந்த படத்தை விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் இப்ராகிம் ராவுத்தர் தயாரித்திருந்தார். இந்த படத்தை ஆர்கே செல்வமணி டைரக்ட் செய்திருந்தார். சந்தன கடத்தல் வீரப்பன் கதையை பின்னணியாக கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது.

அந்த காலகட்டத்தில் இயக்குனர் ஆர்கே செல்வமணி இயக்கிய படங்கள் பெரும்பாலும் அன்றைய அரசியல் சூழ்நிலையை பேசும் படங்களாக இருந்தன. கேப்டன் பிரபாகரன் படமும் அந்த ரகத்தில் சட்டம் ஒழுங்கு அரசியல்தான் பேசியது. இதில் வீரபத்ரன் என்ற கேரக்டரில் வில்லனாக மன்சூர் அலிகான் அறிமுகமாகி இருந்தார்.

- Advertisement -

மேலும் கேப்டன் பிரபாகரன் படத்தில் ரூபிணி ரம்யா கிருஷ்ணன் சரத்குமார் லிவிங்ஸ்டன் காந்திமதி பீலிசிவம் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படம் 1991ம் ஆண்டில் வெளியான பல தியேட்டர்களில் 200 முதல் 275 நாட்கள் வரை ஓடியது. ஆட்டமா தேரோட்டமா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. விஜயகாந்த் பேசிய அரசியல் வசனங்கள் பெரிய வரவேற்பை பெற்றது.

இப்போது 34 ஆண்டுகளுக்கு பிறகு கேப்டன் பிரபாகரன் படம் கடந்த 22ம் தேதி ரி ரிலீஸ் செய்யப்பட்டு தியேட்டர்களில் கடந்த 2 வாரங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் வெளியாகி உள்ள கேப்டன் பிரபாகரன் பார்க்கும் இன்றைய இளம் வயதினர், சிஜி விஎப்எக்ஸ் தொழில்நுட்பம் இல்லாமல் படத்தில் எடுக்கப்பட்ட பல நிஜ காட்சிகளை பார்த்து அசந்து போய் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக கேப்டன் பிரபாகரன் படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் தியேட்டர்களில் கூட்டம் காணப்படுகிறது. இதனால் நல்ல வசூல் கிடைத்து வருகிறது. கடந்த 22ம் தேதி ரி ரிலீஸ் செய்யப்பட்ட கேப்டன் பிரபாகரன் படம் கடந்த 10 நாட்களில் மொத்தம் 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இதில் 10வது நாளில் மட்டும் ரூ. 2.33 கோடி வசூலாகி உள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 100 தியேட்டர்களில் மட்டுமே கேப்டன் பிரபாகரன் படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தினசரி வசூல் ரூ. 2 கோடிக்கு குறையாமல் இப்போது நீடித்து வரும் நிலையில், இன்னும் இந்த படம் அதிக வசூலை குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை வைதேகி காத்திருந்தாள் மாநகர காவல் சின்ன கவுண்டர் கூலிக்காரன் போன்ற ஹிட் படங்களையும் ரி ரிலீஸ் செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்