- Advertisement -
Homeபொழுதுபோக்குஏகே 64 படப்பிடிப்பு அம்போ தானா? நடிகர் அஜீத்குமார் மீது உச்சக்கட்ட கோபத்தில் அவரது ரசிகர்கள்…...

ஏகே 64 படப்பிடிப்பு அம்போ தானா? நடிகர் அஜீத்குமார் மீது உச்சக்கட்ட கோபத்தில் அவரது ரசிகர்கள்… இப்படி ஒரு முடிவை அவர் எடுக்கலாமா?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி. இந்த படங்கள் இரண்டும் கடந்த 2025ம் ஆண்டில் ஒன்றபின் ஒன்றாக வெளியாகின. ஆனால் இந்த படங்கள் 2023ம் ஆண்டில் பொங்கலுக்கு அஜீத்குமார் நடித்த துணிவு படம் ரிலீஸான நிலையில், 2 ஆண்டுகள் கழித்துதான் வெளியாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி ஆண்டுக்கணக்கில் அஜீத்குமார் படங்கள் வெளியாவது அவரது ரசிகர்களை கடும் அதிருப்தியில் தள்ளியுள்ளது. இந்த சூழலில் 2025ம் ஆண்டு முழுவதும் நடிகர் அஜீத்குமார் ஏகே 64 படப்பிடிப்பை துவங்காமல் தள்ளி வைத்தார். அந்த ஆண்டு முழுவதும் கார் ரேஸ்க்காக 12 மாதங்களையும் ஒதுக்கி விட்டார். இது அவரது ரசிகர்களை அதிருப்தியில் தள்ளியது.

- Advertisement -

இந்த ஒரு சூழலில் இந்த 2026ம் ஆண்டில் ஏகே 64 படப்பிடிப்பை விரைவில் துவங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிப்பதாகவும் தகவல் வந்த நிலையில் ஏகே ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

ஆனால் தனது 64வது படத்தில் நடிக்க அஜீத்குமார் 186 கோடி ரூபாய் சம்பளம் கேட்ட நிலையில் இந்த படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. அதனால் படப்பிடிப்பு துவங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இந்த படம் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏகே ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர்.

- Advertisement -

இத்ததைய ஒரு சூழலில் இப்போது ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் அஜீத்குமார் 2026 மார்ச் அதாவது இந்த மாதம் முதல் வருகிற 2027ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை பல நாடுகளில் கார் ரேஸ் நடப்பதால் அதில் அவர் அவர் கலந்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதனால் ஏகே 64 படப்பிடிப்பு 2027ம் ஆண்டில் தான் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் அஜீத்குமார் ரசிகர்கள் பலத்த அதிர்ச்சியிலும் பயங்கர கோபத்திலும் இருந்து வருகின்றனர். மேலும் அஜீத்குமாரின் கார் ரேஸ் குறித்த திரைப்படம் மட்டும் இந்த ஆண்டில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் நடிக்காமல் இப்படி கார் ரேஸில் கவனம் செலுத்துகிறாரே, தனது ரசிகர்கள் மீது இவருக்கு கவனமே இல்லையா என்றும் பலர் கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்