- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர் படத்துக்கு இசையமைக்க மறுத்தார் இளையராஜா, அதில் முதலில் நடிக்க இருந்தது மோகன் அல்ல ...

அவர் படத்துக்கு இசையமைக்க மறுத்தார் இளையராஜா, அதில் முதலில் நடிக்க இருந்தது மோகன் அல்ல – சூப்பர் ஹிட் படம் பற்றிய பல உண்மைகளை சொன்ன கங்கை அமரன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இப்போதும் பல படங்கள் கிளாசிக் படங்கள் என்று கொண்டாடப்படுகின்றன. அந்த வரிசையில் ரஜினிகாந்த் நடித்த நல்லவனுக்கு நல்லவன் தர்மதுரை ஊர்க்காவலன் படிக்காதவன் தளபதி முரட்டுக்காளை கமல் நடித்த சிப்பிக்குள் முத்து குணா சகலகலா வல்லவன் மோகன் நடித்த குங்குமச்சிமிழ் விதி மௌனராகம் விஜயகாந்த் நடித்த வைதேகி காத்திருந்தேன் என பல படங்களை சொல்லலாம்.

அந்த வரிசையில் நடிகர் மோகன் நடித்த படம் பயணங்கள் முடிவதில்லை. மோகன் எஸ்வி சேகர் பூர்ணிமா உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் இயக்கி இருந்தார். கோவை தம்பி தயாரித்த இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருந்தார்.

- Advertisement -

ஆர் சுந்தர்ராஜன் படங்களை பொருத்த வரை வெகு எளிதான கதையாக இருக்கும். பாடல்கள்தான் அவரது படத்தையே வேற லெவலில் கொண்டு செல்லும். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. இளையநிலா பொழிகிறதே பாடலை முணுமுணுக்காத உதடுகளே இல்லை எனலாம்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பயணங்கள் முடிவதில்லை படம் குறித்து இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியதாவது, நான் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் தயாரிப்பாளர் கோவை தம்பி ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். என் பாட்டு இல்லாமல் ஆர் சுந்தர்ராஜன் ஒரு படத்தை கூட ரிலீஸ் செய்ய மாட்டார்.

- Advertisement -

ஆனால் ஆர் சுந்தர்ராஜன் எடுத்த பயணங்கள் முடிவதில்லை படத்துக்கு இசையமைக்க இளையராஜா முதலில் மறுத்துவிட்டார். கதையை ஒருமுறை கேளுங்க அண்ணா, அவன் கொஞ்சம் பேசினாலும் கதை நல்லா இருக்கு என்றேன். ஆர் சுந்தர்ராஜனை, அவன் ஓவராக வாய் பேசுகிறான், அவனுக்கு படம் பண்ண முடியாது என்றார். எப்படியோ பேசி சம்மதிக்க வைக்க அந்த படத்துக்கு இசையமைக்க வைத்தேன்.

பயணங்கள் முடிவதில்லை படத்தில் முதலில் நடிக்க இருந்தது அப்போது பன்னீர் புஷ்பங்கள் படத்தில் நடித்திருந்த சுரேஷ்தான். ஆனால் அவருக்கு விபத்து ஒன்று நடந்து விட்டது. பிறகுதான் அந்த கேரக்டரில் மோகனை நடிக்க வைத்தோம். படத்தின் நாயகி பூர்ணிமாவுக்கு, கோவை தம்பி சார்பில் அட்வான்ஸ் சம்பளம் கொடுத்ததே நான்தான் என பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் இயக்குனர் கங்கை அமரன்.

- Advertisement -

சற்று முன்