- Advertisement -
Homeபொழுதுபோக்குபடம் வெளியான மறுநாளே சக்சஸ் மீட் நடத்தும் இன்றைய சினிமாவின் அவலம், நடிகர் சூர்யா...

படம் வெளியான மறுநாளே சக்சஸ் மீட் நடத்தும் இன்றைய சினிமாவின் அவலம், நடிகர் சூர்யா எடுத்த அதிரடி முடிவு – பிளாக்பஸ்டர் ஹிட்டுன்னா அதுதான்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் படங்களின் வெற்றி விழா நடத்தப்படும். ஒரு படம் தியேட்டரில் வெளியாகி 100 நாட்கள் 125 நாட்கள் 150 நாட்கள் 175 நாட்கள் 200 நாட்கள் என ஓடி சாதனை படைக்கும். வசூலையும் குவிக்கும். அப்போது அந்த படங்களின் வெற்றிவிழாவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் கொண்டாடும்.

அந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர்கள் ஹீரோ ஹீரோயின் காமெடி நடிகர்கள் வில்லன் என மற்ற நடிகர் நடிகைகளும் தொழில்நுட்ப கலைஞர்களும் பங்கேற்பர். தியேட்டர் உரிமையாளர்கள் வினியோகஸ்தர்களும் கலந்துக்கொள்வர். அனைவருக்கும் ஷீல்டு வழங்கி விழாவில் நடிகர் நடிகைகள் பேசுவார்கள்.

இதுதான் உண்மையான வெற்றிவிழா. ஆனால் இப்போதெல்லாம் படம் வெளியான மறுநாளே சக்சஸ் மீட் வைத்து படம் வெற்றி பெற்றதாக அறிவிக்கின்றனர். இது எந்த விதத்தில் என்பது ரசிகர்களுக்கு புரியவில்லை. ஒரே ஊரில் 10 தியேட்டர்களில் ஒரு படம் வெளியாகி முதல் நாளில் 50 காட்சிகள் ஓடிவிடுகிறது.

அந்த அடிப்படையில் அந்த படம் ஒரே நாளில் திரையிட்ட காட்சிகளை வைத்து சக்சஸ் மீட் வைக்கிறார்களா என புரியவில்லை. ஆனால் மொக்க படங்களுக்கும் இந்த டெக்னிக்கில் சக்சஸ் மீட் நடத்தியும் காமெடி செய்கின்றனர். கேட்டால் பிரமோசன் என்று மழுப்பி விடுகின்றனர். ஆனால் ஒரு திரைப்படம் வெற்றியை வசூலும் தியேட்டர்களில் ஓடிய நாட்களும்தான் முடிவு செய்யும்.

அந்த வகையில் நடிகர் சூர்யா நடித்த கருப்பு படம் ரூ. 340 கோடிக்கு மேல் வசூலை குவித்த பிளாக் பஸ்டர் ஹிட் படமாகும். வருகிற 22ம் தேதியுடன் இந்த படம் 100வது நாளை கொண்டாடுகிறது. அந்த அடிப்படையில் கருப்பு படத்தின் வெற்றி விழாவை மிக சிறப்பாக கொண்டாட நடிகர் சூர்யா முடிவு செய்திருக்கிறார். இதற்கு இயக்குனர் ஆர்ஜே பாலாஜியும் ஓகே சொல்லி இருக்கிறார்.

அதனால் வருகிற செப்டம்பர் மாதமோ அல்லது இடையிலோ கருப்பு படத்தின் வெற்றி விழா சிறப்பாக நடத்தப்பட உள்ளது. இதில் இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் நடிகைகள் கருப்பு பட தொழில்நுட்ப கலைஞர்கள் வினியோகஸ்தர்கள் தியேட்டர் உரிமையாளர்கள் என 1990களில் நடந்த வெற்றி விழா போல நடத்தி அனைவருக்கும் ஷீல்டு கொடுக்க உள்ளனர். உண்மையான வெற்றி விழா என்றால் அது இதுதான் என்று மற்றவர்களுக்கு உணர்த்தும் வகையில் இந்த விழா நடைபெற உள்ளது.

சற்று முன்