- Advertisement -
Homeபொழுதுபோக்குபாலாவின் வணங்கான் திரைப்படத்தின் பாடல்களுக்கு ஒரு இசையமைப்பாளர்... பின்னணி இசைக்கு வேறொரு இசையமைப்பாளர்... என்னடா நடக்குது...

பாலாவின் வணங்கான் திரைப்படத்தின் பாடல்களுக்கு ஒரு இசையமைப்பாளர்… பின்னணி இசைக்கு வேறொரு இசையமைப்பாளர்… என்னடா நடக்குது இங்க…

- Advertisement -

சேது திரைப்படத்தின் மூலம் தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்திக் கொண்டவர் பாலா. அங்கிருந்து நந்தா, பிதாமகன், நான் கடவுள் என அவர் இயக்கிய ஒவ்வொரு திரைப்படங்களும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை உலுக்கின. இதன் காரணமாக அவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இங்கு உள்ளது.

 

ஆனால் சமீப காலமாக அவர் இயக்கும் திரைப்படங்கள் அந்த அளவு வெற்றி முகட்டை எட்டவில்லை. நாச்சியார் உள்ளிட்ட திரைப்படங்கள் தோல்வியடைந்தன. இப்படியான சூழலில் சூர்யாவை வைத்து அவர் வணங்கான் திரைப்படத்தை தொடங்கினார்.

 

இதனை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்தது. கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் சூட்டிங் நடைபெற்றது. தொடர்ந்து படத்திற்கான முதல் போஸ்டரும் வெளியானது. படத்தில் சூர்யா காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.

 

இப்படி விறுவிறுப்பாக படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வந்த சூழலில் திடீரென, அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. சில நாட்கள் கழித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாலா, படத்தில் இருந்து சூர்யா விலகியதை உறுதி செய்தார். மீண்டும் பிதாமகன் போல நந்தா போல ஒரு திரைப்படத்தில் நாம் மீண்டும் இணைவோம் என்று அவர் கூறியிருந்தார். இந்த விவகாரம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

படப்பிடிப்பின் போது, சூர்யா மற்றும் பாலாவுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை தான் இதற்கு காரணம் என்னும் கூறப்பட்டது. அதாவது கதையை ஒழுங்காக சூர்யாவிடம் பாலா தெரிவிக்கவில்லை என்றும் அதனாலேயே இந்த பிரச்சனை ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதனிடையே சூர்யாவுக்கு பதில் அருண் விஜயை வைத்து இந்த திரைப்படத்தை பாலா இயக்கி முடித்திருக்கிறார்.

 

இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ஓரளவு பேசப்படும் வகையிலேயே அமைந்தது. இந்த நிலையில் படத்திற்கு பின்னணி இசை தொடர்பான பணிகளில் சாம் சி எஸ் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான பாடல்களை ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார். தற்போது அவர் பிஸியாக இருப்பதால், பின்னணி இசைப் பணிகளை சாம் சி எஸ்ஸிடம் பாலா கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தை அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற காரணத்தால் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக தெரிகிறது.

சற்று முன்