- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயகாந்தின் உண்மையான இப்போதைய நிலை என்ன, பழைய புகைப்படங்களை பதிவிட்டாரா பிரேமலதா? - பயில்வான் ரங்கநாதன்...

விஜயகாந்தின் உண்மையான இப்போதைய நிலை என்ன, பழைய புகைப்படங்களை பதிவிட்டாரா பிரேமலதா? – பயில்வான் ரங்கநாதன் எழுப்பிய கேள்விகளால் பரபரப்பு

- Advertisement -

நடிகர் விஜயகாந்த், 70 வயதுகளை கடந்த நிலையில் உடல் நலமின்றி இருந்தார். சில வாரங்களுக்கு முன் திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும், அவர் தொடர்ந்து டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன், ஒரு அதிர்ச்சிக்கரமான மருத்துவ அறிக்கையை, அந்த மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு இருந்தது. அதில், கடந்த 24 மணி நேரமாக, விஜயகாந்த் உடல் நிலை சீராக இல்லை. தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம், என்ற வகையில் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இதையறிந்த தேமுதிக தொண்டர்களும், விஜயகாந்த் ரசிகர்களும் பலத்த அதிர்ச்சியடைந்தனர்.

- Advertisement -

இதையடுத்து, விஜயகாந்துக்கு தொண்டை பகுதியில் துளைகள் இடப்பட்டு, அதன் வழியாக குழாய்கள் சொருகி, நுரையீல் பகுதிக்கு காற்று அனுப்பப்படுகிறது. செயற்கை சுவாசத்தில் அவர் இருக்கிறார். மிகவும் நெருக்கடியான நிலையில் அவரது உடல் நிலை உள்ளது என்ற தகவல்களும் பரவியது, ரசிகர்களை மேலும் பதட்டப்படுத்தியது.

இதற்கிடையே விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, விஜயகாந்துடன் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு, இந்த புகைப்படங்கள் மருத்துவமனையில் இப்போது எடுக்கப்பட்டது. கேப்டன் நலமாக இருக்கிறார். யாரும் வதந்திகளை பரப்ப வேண்டும். அதே போல் வதந்திகளை நம்பவும் வேண்டாம். அவரை கண்ணும் கருத்துமாக நான் கவனித்து வருகிறேன், எனவும் வீடியோவில் பேசி இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில், இன்று ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய நடிகர், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், மருத்துவமனைக்கு விஜயகாந்தை பார்க்கச் சென்ற பெப்ஸி தலைவர் ஆர்கே செல்வமணியை, தொற்று வந்துவிடும் என எச்சரித்து, மருத்துவமனை நிர்வாகம் அவரை பார்க்க அனுமதிக்கவில்லை. அப்புறம் எப்படி இவர்கள் விஜயகாந்துடன் இப்படி அருகில் இருந்து புகைப்படங்கள் எடுத்திருக்க முடியும். அதற்கான வாய்ப்பே இல்லை.

தேமுதிக தொண்டர்களை ஆறுதல்படுத்தவும், ரசிகர்களை சாந்தப்படுத்தவும் ஒரு மாதத்துக்கு முன்போ, எப்போதோ விஜயகாந்துடன் எடுத்த பழைய புகைப்படங்களை பிரேமலதா வெளியிட்டு இருக்கிறார். ஜெயலலிதாவை, சசிகலா தவிர யாரும் பார்க்க அனுமதிக்காதது போல, விஜயகாந்தை அவரது குடும்பம் தவிர பிறர் பார்க்க அனுமதி மறுக்கின்றனர். விஜயகாந்தின் இப்போதைய உண்மையான நிலை என்ன என்பது பிரேமலதா குடும்பத்துக்கு மட்டுமே தெரியும். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளியை புகைப்படம் எடுக்க மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்காது. ஏனெனில், கேமராவில் இருந்து வரும் எக்ஸ்ரே கதிர்கள் நோயாளியை பாதிக்கும். எனவே, இது பழைய புகைப்படங்கள்தான் என கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

- Advertisement -

சற்று முன்