- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சூரி பரோட்டா தின்னு காமெடி செய்தவர்…இப்போ ஹீரோ ஆயிட்டார் - தயாரிப்பாளர் கே ராஜன்...

நடிகர் சூரி பரோட்டா தின்னு காமெடி செய்தவர்…இப்போ ஹீரோ ஆயிட்டார் – தயாரிப்பாளர் கே ராஜன் விமர்சனம் – இவர் பாராட்டறாரா? இல்லே திட்டறாரா?

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சூரி. அதன்பிறகு விடுதலை 2 படத்திலும் சூரி நடித்திருந்தார். ஆனால் விடுதலை 2ம் பாகத்தில் சூரிக்கு அந்த அளவுக்கு இயக்குனர் வெற்றிமாறன் முக்கியத்துவம் தரவில்லை. ஆனால் தொடர்ந்து சூரி நடித்த கருடன் படமும் நல்ல வெற்றியை பெற்றது.

கருடன் படத்தை கொடி பட இயக்குனர் துரை செந்தில்குமார் டைரக்ட் செய்திருந்தார். மேலும் இந்த படத்தில் நடிகர் சசிகுமார் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். விடுதலை கருடன் படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூரி நடித்த படம் கொட்டுக்காளி.

- Advertisement -

நடிகர் சூரியின் நெருங்கிய நண்பரான நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த இந்த படத்தை கூழாங்கல் பட இயக்குனர் பி எஸ் வினோத்ராஜ் இயக்கி இருந்தார். ஆனால் இந்த படம் கமர்ஷியலாக பெரிய அளவில் வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை. இதையடுத்து விலங்கு வெப் சீரிஸ் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்த படம் மாமன். சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். மேலும் ராஜ்கிரண் சுவாசிகா பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்த மாமன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்தது.

மாமன் படத்தின் திரைக்கதையை நடிகர் சூரியே எழுதியிருந்தார். தாய்மாமன் உறவை மையமாக வைத்து குடும்பக் கதையில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடிகர் சூரி இப்போது மண்டாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவும் நடிகர் சூரி கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை மலையாள பட இயக்குனர் இயக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது

- Advertisement -

ஆரம்பத்தில் காமெடி நடிகராக இருந்தவர் சூரி. இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் 50 பரோட்டா சாப்பிடும் காமெடி காட்சியில் நடித்துதான் சூரி பிரபலமானார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கே ராஜன் கூறியதாவது, சூரி என்ன பெரிய அழகனா? சூரி பரோட்டாவாக தின்னுட்டு காமெடி பண்ணிட்டு இருந்தார். ஆனால் இப்போது தொடர்ந்து 4,5 படங்கள் ஹீரோவா வெற்றி கொடுத்திருக்கிறார்.

ஏனென்றால் அந்த படத்தில் கதை இருந்தது. குடும்பம் இருந்தது. கவர்ச்சியும் கொச்சையும் அந்த படங்களில் கிடையாது. அதே மாதிரி குரூப் டான்ஸ் இல்ல. பெரிய சண்டை காட்சிகளும் இல்ல. ஆனால் அவர் படங்களில் நல்ல கிராமத்து கதைகள் இருந்தது. அதனால்தான் அவருக்கு வெற்றி கிடைத்தது என்று இயக்குனர் கே ராஜன் பேசியிருக்கிறார். ஆனால் இவர் நடிகர் சூரியை திட்டுகிறாரா அல்லது பாராட்டுகிறாரா என்று குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்