“வாரிசு” பட ஆடியோ வெளியீட்டு விழாவில் சரத்குமார் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று கூறியதுதான் இப்போது வரை சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய வாக்குவாதத்திற்கு வித்திட்டடுள்ளது. சரத்குமாரின் இந்த பேச்சு ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே ஒரு இண்டெர்நெட் போரையே உண்டு செய்துவிட்டது.

இந்த விவகாரம் தொடங்கியபோதே சரத்குமாரிடம், “ஏன் விஜய்யை சூப்பர் ஸ்டார் என கூறினீர்கள்?” என்று ஒரு பேட்டியில் கேட்டபோது, “ரஜினியை நான் சூப்பர் ஸ்டார் இல்லை என கூறவே இல்லையே” என்று பதிலளித்தார். ஆனாலும் சமூக வலைத்தளங்கில் அவரின் பேச்சு மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் கொளுந்துவிட்டு எரிந்த நிலையில் “ஜெயிலர்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கூறிய காகா-கழுகு கதை எரிகிற நெருப்பில் பெட்ரோலை ஊற்றியது போல் ஆனது. மேலும் “ஜெயிலர்” திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு பதிலடி கொடுப்பது போலவே “Hukum” பாடலை எழுதியிருந்தனர் படக்குழுவினர்.

இந்த நிலையில் தற்போது சரத்குமார் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதாவது சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சரத்குமார், தனது மனைவியான ராதிகாவை குறித்து மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார்.
தனது மனைவி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளதாகவும் அவரை நாட்டின் தலை சிறந்த நடிகையாக பார்ப்பதாகவும், சினிமா, சின்னத்திரை, ஓடிடி போன்ற அனைத்து தளங்களிலும் ஒரு முன்னணி நடிகையாக ராதிகா திகழ்ந்து வருவதாகவும் சரத்குமார் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர், ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்து 47 அல்லது 48 வருடங்கள் இருக்கும், அதே போல் ராதிகாவும் 48 வருடங்களாக ரஜினிகாந்திற்கு இணையான ஒரு தலைச்சிறந்த நடிகையாக இருப்பதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. சரத்குமாரின் இந்த பேச்சால் ரஜினி ரசிகர்கள் கடுப்பில் இருக்கிறார்களாம்.





