- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிகாந்த் மற்றும் சூர்யா ஆகியோருடன் நேருக்கு நேர் மோத தயாரான சிவகார்த்திகேயன் - விவரம் இதோ

ரஜினிகாந்த் மற்றும் சூர்யா ஆகியோருடன் நேருக்கு நேர் மோத தயாரான சிவகார்த்திகேயன் – விவரம் இதோ

- Advertisement -

சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாக இருக்கும் வேட்டையின் திரைப்படமானது எதிர்வரும் அக்டோபர் 10-ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. தற்போது தனது 171-வது திரைப்பட பணிகளில் ஈடுபட்டு வரும் ரஜினிகாந்த் ஏற்கனவே வேட்டையன் படத்தில் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு தற்போது அடுத்த படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

எனவே வேட்டையன் படம் திட்டமிட்டபடி அக்டோபர் 10-ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. அதேபோன்று இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் சூர்யாவின் கங்குவா திரைப்படமும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

- Advertisement -

அதனால் இந்த இரு படங்களும் அக்டோபர் 10-ஆம் தேதி நேருக்கு நேர் மோதிக்கொள்ள இருந்தது. இந்நிலையில் இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள “அமரன்” திரைப்படமும் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல்முறையாக சிவகார்த்திகேயன் நடிப்பில் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் என்கிற பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படமானது ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வேளையில் தற்போது இந்த படமும் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகி எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.

- Advertisement -

முதல்முறையாக இந்த படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். ஒருவேளை இந்த படம் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாவது உறுதியானால் சிவகார்த்திகேயன் நேருக்கு நேராக ரஜினி மற்றும் சூர்யா ஆகியவருடன் மோத இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “அயலான்” திரைப்படம் தோல்வியடைந்த நிலையில் இந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப சிவகார்த்திகேயனும் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்