- Advertisement -
Homeபொழுதுபோக்குதமன்னா செய்த காரியத்தால் மிஸ் ஆன பரிசு, இப்படி விலை உயர்ந்த காரை தவறவிட்டு நிக்கிறாரே,...

தமன்னா செய்த காரியத்தால் மிஸ் ஆன பரிசு, இப்படி விலை உயர்ந்த காரை தவறவிட்டு நிக்கிறாரே, ஏன் தெரியுமா?

- Advertisement -

கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியான “ஜெயிலர்” திரைப்படம் மாஸ் ஹிட் அடித்ததை தொடர்ந்து உலகளவில் ரூ.500 கோடிகளுக்கு மேல் வசூல் ஆகி வருகிறது. இவ்வாறு ஒரு மிகப் பெரிய பிளாக் பஸ்டர் திரைப்படமாக “ஜெயிலர்” திரைப்படம் அமைந்துள்ளதால் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் போன்றோர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து கலாநிதி மாறன் ரஜினிகாந்திற்கு பிஎம்டபுள்யூ எக்ஸ் 7 என்ற காரை பரிசாக வழங்கியுள்ளார். அதனை தொடர்ந்து இயக்குனர் நெல்சனிற்கு விலை உயர்ந்த பேர்சே காரை பரிசாக வழங்கியுள்ளார்.

அதன் பின் இசையமைப்பாளர் அனிருத்திற்கும் கலாநிதி மாறன் விலை உயர்ந்த போர்சே காரை பரிசாக வழங்கியுள்ளார். இந்த நிலையில் தமன்னாவிற்கு பரிசு உண்டா என்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ளது.

அதாவது “காவாலா” பாடல் “ஜெயிலர்” திரைப்படத்தின் வெற்றிக்கு ஒரு பெரும்பங்கு வகித்தது. ஆதலால் தமன்னாவிற்கு ஒரு விலை உயர்ந்த காரை நெல்சன் பரிசாக கொடுப்பார் என கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து வலைப்பேச்சு பிஸ்மி, தனது வலைப்பேச்சு வீடியோவில் தமன்னாவிற்கு பரிசு கொடுக்காத காரணத்தை குறித்து ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது தமன்னா தான் சொன்னபடி கால்ஷீட் கொடுக்காமல் “ஜெயிலர்” படக்குழுவை இழுத்தடித்துவிட்டாராம். ஹிந்தியில் ஒரு வெப் சீரீஸில் நடித்துக்கொண்டிருந்ததால் தமன்னா “ஜெயிலர்” திரைப்படத்திற்கு சரியாக கால்ஷீட் தரவில்லையாம். இவ்வாறு ஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால் அவருக்கு கலாநிதி மாறன் பரிசு வழங்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

சற்று முன்