- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் Vs ஜெயிலர்.. ஜெயிலர் படம் வெளியாகும் அன்றே மேலும் ஒரு ஜெயிலர் படம் வெளியாகிறது

ஜெயிலர் Vs ஜெயிலர்.. ஜெயிலர் படம் வெளியாகும் அன்றே மேலும் ஒரு ஜெயிலர் படம் வெளியாகிறது

- Advertisement -

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த தர்பார் மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்த அண்ணாத்த ஆகிய இரண்டு படங்களும் தோல்வியடைந்தன. இதன் காரணமாக அவரது சம்பளம் கணிசமாக குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. சம்பளம் குறைந்ததோடு மட்டுமின்றி அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பேச்சு சமீபகாலமாக கோலிவுட்டில் பலமாகே கேட்க ஆரம்பித்திருக்கிறது. இதன் காரணமாக தலைவரின் ரசிகர்கள் அப்செட்டாகியுள்ளன.

இப்படிப்பட்ட சூழலில் கட்டாயம் ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். இதன் காரணமாக கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த நெல்சன் திலீப்குமாருடன் கைகோர்த்தார். பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தபோதே நெல்சனுடன் ரஜினி இணைகிறார் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால் பீஸ்ட் ரோஸ்ட் ஆனதால் ரஜினிக்கு தேவைப்படும் ஹிட்டை நெல்சன் கொடுத்துவிடுவாரா என்ற கேள்வி பலரிடம் தோன்றியது. மேலும் படத்திலிருந்து அவர் நீக்கப்படுகிறார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.

ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் நெல்சனே படத்துக்கு இயக்குநராக இறுதி செய்யப்பட்டார். படத்துக்கு ஜெயிலர் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ரஜினியுடன் மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகிபாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படமானது ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாகிறது.

படத்திலிருந்து காவாலா மற்றும் ஹுக்கும் ஆகிய இரண்டு சிங்கிள்கள் வெளியாகின. குறிப்பாக ஹுக்கும் பாடல் ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என குரல் எழுந்த நிலையில் ஹுக்கும் பாடல் வரிகள் அதற்கு பதிலடி கொடுப்பது போல் அமைந்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். அதுமட்டுமின்றி இதே வைப் படம் முழுக்க இருந்தால் நிச்சயம் ஜெயிலர் மெகா ஹிட் என்ற நம்பிக்கை அவர்களுக்கு பிறந்திருக்கிறது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா 28ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. இதற்கான 1000 இலவச பாஸ்கள் நேற்று 15 நொடிகளிலேயே காலியானத்.

இப்படி பலத்த எதிர்பார்ப்பு ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர் படத்துக்கு எழுந்திருக்கும் சூழலில் சிறிய அளவிலான சிக்கல் ஒன்றும் எழுந்திருக்கிறது. அதாவது மலையாள இயக்குநர் சக்கிம் மடத்தில் என்பவர் ஜெயிலர் என்ற பெயரில் படம் இயக்கியிருக்கிறார். ரஜினியின் ஜெயிலர் பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அதே பெயரில் தானும் படம் இயக்கியிருக்கிறேன் எனவே தமிழ் ஜெயிலர் பெயரை மாற்ற வேண்டும் என தெரிவித்திருந்தார்.

ஆனால் தமிழ் ஜெயிலர் படக்குழுவோ இந்தப் பெயர்தான் கதைக்கு பொருத்தமானது எனவே மாற்றுவதற்கான வாய்ப்பே இல்லை என திட்டவட்டமான முடிவில் இருக்கிறது. இந்தச் சூழலில் சக்கிம் மடத்தில் இயக்கிய ஜெயிலர் படமும் ஆகஸ்ட் 10ஆம் தேதியே கேரளாவில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரே பெயரில் இரண்டு படங்கள் வருவதால் நிச்சயம் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்.

இதன் காரணமாக இரண்டு படங்களின் வியாபாரமும் கொஞ்சம் பாதிக்கப்படலாம். ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் பான் இந்தியா படமாக வெளியாகிறது. எனவே கடைசி நேரத்தில் பெயரை மாற்றுவது சாத்தியமில்லாத ஒன்று. சக்கிம் இந்த விஷயத்தில் கொஞ்சம் விட்டுக்கொடுத்து மலையாள ஜெயிலர் ரிலீஸை தள்ளி வைத்திருக்கலாம் என ரசிகர்களும், திரை ஆர்வலர்களும் சமூக வலைதளங்களில் தெரிவித்துவருகின்றனர்.

சற்று முன்