- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதை எல்லாம் கழட்டி வெச்சுட்டுதான் தனஞ்செயன் மாதிரி ஆட்கள் வேலைக்கே போவாங்க - விளாசித் தள்ளிய...

அதை எல்லாம் கழட்டி வெச்சுட்டுதான் தனஞ்செயன் மாதிரி ஆட்கள் வேலைக்கே போவாங்க – விளாசித் தள்ளிய இயக்குநர் கரு பழனியப்பன்

- Advertisement -

பருத்திவீரன் தயாரிப்பு பிரச்னையில் இருந்த சம்பந்தப்பட்ட இயக்குநர் அமீரும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் விலகிக்கொண்டாலும் இந்த பஞ்சாயத்தை மற்ற சிலர், அடிக்கடி தூண்டிவிட்டு ஏதேனும் அதைப்பற்றி கிளப்பி விட்டுக்கொண்டே இருக்கின்றனர். சமீபத்தில் அப்படித்தான் முன்னாள் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனுக்கு அமீர் நீண்ட விளக்கமான பதில் அளித்திருந்தார்.

இந்த சூழலில் தயாரிப்பாளர் தனஞ்செயன், அமீருக்கு ஆதரவாளராக இருக்கும் இயக்குநர் சசிக்குமார், கரு பழனியப்பன், தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஜாபர், அம்மா கிரியேசன்ஸ் சிவா, தினகரன் ஜெய் உள்ளிட்டவர்களை அழைத்து போனில் பேசியுள்ளார். இதில் ஞானவேல் ராஜாவுக்கு அவர் சாதகமாக பேசியதாக தெரிகிறது.

இதுகுறித்து தகவல் வெளியான நிலையில், நேற்று இயக்குநர் அமீர் ஒரு ஆடியோ ரிலீஸ் செய்தார். அதில் தனஞ்செயனை கடுமையாக எச்சரித்து என் விஷயத்தில் தலையிடாதீர்கள், என் உரிமைகளோடு விளையாடாதீர்கள் என தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த தனஞ்செயனும் இனிமேல் உங்களை பற்றி பேசவே மாட்டேன் என்று கூறியிருந்தார்.

இந்த சூழலில் தனஞ்செயன் வெளியிட்ட ஆடியோ பதிவுக்கு இயக்குநர் கரு பழனியப்பன் ஒரு ஆடியோ மூலம் கடுமையாக பதிலளித்து ஒரு பதிவை செய்துள்ளார். அதில், தனஞ்செயன் குறிப்பிட்ட நபர்களை எல்லாம் பார்த்து பார்த்து பருத்தி வீரன் படம் பற்றி மட்டுமே பேசியுள்ளார். இவருக்கு பேசுவதற்கு வேறு விஷயங்களே இல்லாத போது பருத்திவீரன் குறித்து ஏன் பேச வேண்டும்.

ஒருவருக்கு போன் செய்தால், அப்போது அவர் பிஸியாக இருந்தால் மறுபடியும் அந்த எண்ணை பார்த்து திரும்ப அழைத்து பேசுவார். வெற்றிமாறன் அப்படி அழைத்து பேசினால், அவர்தான் என்னை அழைத்தார், அப்போதுதான் அதுபற்றி நான் பேசினேன் என்று தனஞ்செயன் சொல்கிறார். அப்படி எல்லாரும் அழைத்து பேச இவர் ஒன்றும் பாதிரியார் இல்லை. யாரும் பாவமன்னிப்பும் கேட்கவில்லை.

தனஞ்செயன் போன்ற ஆட்கள் வேலைக்கு போகும் போதே மூளை, இதயம் போன்றவற்றை கழட்டி வைத்துவிட்டுதான் போவார்கள். ஏனென்றால் அவை உடன் இருந்தால் உண்மையை பேசிவிட வேண்டிய சூழல் ஏற்பட்டு விடும். ஊருக்கு எல்லாம் நியாயம் பேசும் இவரை போன்றவர்கள், சொந்த விஷயத்தில் உண்மை பேச மாட்டார்கள். நான் உத்தமன், உத்தமன் என்று அவர்களே கூறிக்கொள்ள வேண்டியதுதான் என்று காட்டமாக பேசி இருக்கிறார் கரு பழனியப்பன்.

சற்று முன்