பல வருடங்களுக்குப் பிறகு ஏன்… இதுவரைக்கும் இல்லாத வகையில் இரண்டு திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் அஜித்குமார். இது அஜித் குமாருக்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஆச்சரியத்தை தான் ஏற்படுத்தி இருக்கிறது. விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களில் அவர் பிஸியாக இருப்பதுதான் இப்போது கோலிவுட்டில் ஹாட் டாபிக்.
அதுவும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியானத போதே, அது பொங்கலுக்கு ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டு விட்டது. இதற்காக படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவிஸ் நிறுவனத்திடம் இருந்து மிகப்பெரிய தொகையை சம்பளமாகப் பெற்று இருக்கிறார் அஜித்குமார். தற்போது வரை இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தான் முடிவடைந்துள்ளது.
அதிலும் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டு இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டப் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அதேபோல் விடாமுயற்சி திரைப்படத்தின் பெரும்பாலான சூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் முடிவடைந்த சூழலில், மீதமுள்ள படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்கிறது.
இப்படி ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படத்தின் படப்பிடிப்புகளும் அங்கு நடைபெற்று வருகின்றன. இதில் விடாமுயற்சி திரைப்படம் தான் முதலில் வெளியாகிறது. எப்படியாவது தீபாவளி அல்லது டிசம்பர் மாதத்தில் இதனை ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. நடுவே இதற்கான பணிகள் தொய்வடைந்த நிலையில், மீண்டும் அதற்கான பணிகள் சூடுபிடிக்க தொடங்கி இருக்கின்றன.
இதற்காக, கடந்த ஐந்தாம் தேதி முதல் காலை 7:00 மணிக்கே படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுகிறாராம் நடிகர் அஜித்குமார். தான் ஒப்புக்கொண்ட பணிகளை முடிப்பதற்காக அவர் இரண்டு திரைப்படங்களுக்கும் சேர்த்து நாளொன்றுக்கு 21 மணி நேரம் உழைப்பதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருக்கிறார். நள்ளிரவு இரண்டு மணிக்கு தான் அவர் சூட்டிங் முடித்துக் கொண்டு ஹோட்டலுக்கு செல்வதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
குட் பேட் அட்லி படத்தின் சூட்டிங் டிசம்பரில் நிறைவடையும். அதன்பிறகு சில மாதங்கள் அஜித் குமார் ஓய்வில் இருப்பார். பிறகு அடுத்த திரைப்படத்தில் காண பணிகள் 2025 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அது நிச்சயமாக கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் உடனான படம்தான் என்று கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் குமார் தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.





