- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்போ இன்ஜினியரிங் மட்டும் என்ன குல தொழிலா... கவனம் ஈர்க்கும் சிங்கப்பூர் சலூன் ட்ரெய்லர்...

இப்போ இன்ஜினியரிங் மட்டும் என்ன குல தொழிலா… கவனம் ஈர்க்கும் சிங்கப்பூர் சலூன் ட்ரெய்லர்…

- Advertisement -

தமிழ் சினிமாக்களில் ஆரம்பத்தில் நகைச்சுவை வேடங்களில் துணை கதாபாத்திரமாக வந்திருந்தவர் ஆர் ஜே பாலாஜி. வானொலி பண்பலையில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய பாலாஜி, நகைச்சுவை உணர்வுடன் சரளமாக பேசுவதன் மூலம் அடுத்த அடுத்த கட்டங்களுக்கு முன்னேறினார். அவருக்கு 2013 ஆம் ஆண்டு வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படம் நல்ல ஒரு பெயரை பெற்று கொடுத்தது.

அதில் ஐடி ஊழியராக நடித்த அவர், ஒன்லைன் காமெடியில் கலக்கி இருப்பார். படத்தில் சந்தானம் மெயின் பிக்சராக இருந்தாலும், ஆர் ஜே பாலாஜி வரும் காட்சி எல்லாம் கலகலப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். இதனை தொடர்ந்து வடகறி திரைப்படத்தில், நடிகர் ஜெய்க்கு தோழனாக படம் முழுவதும் அவர் வந்து இருப்பார்.

ஆர் ஜே பாலாஜியின் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் நானும் ரவுடிதான். விஜய் சேதுபதியுடன் இணைந்து படம் முழுக்க அதகளப்படுத்தி இருக்கும் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. நயன்தாராவை அவர் கலாய்க்கும் இடங்களும், திரையரங்குகளில் கைத்தட்டலை பெற வைத்தது. இப்படியாக திரை உலகில் வளர்ந்து வந்த ஆர் ஜே பாலாஜி, கிரிக்கெட்டிலும் வர்ணனையாளராக இடம்பெற்று பலருக்கும் பரீட்சையமானார்.

தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களின் நடித்து வந்த அவர் எல்கேஜி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அரசியல் கதைகளத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது மட்டும் அல்லாமல், வசூல் ரீதியாகவும் பாராட்டை பெற்றது. முதல் படமே ஆர் ஜே பாலாஜிக்கு வெற்றி படமாக அமைந்தது. பிறகு மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து கலக்கி இருந்தார் பாலாஜி.

அதுமட்டுமில்லாமல் அந்த படத்தில் ஒரு இயக்குனராகவும் அவர் பணிபுரிந்தார். நேரடியாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்ட இந்தத் திரைப்படம், வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான வீட்டுல விசேஷம் திரைப்படமும் ஓரளவு நல்ல விமர்சனத்தை பெற்றது. அந்தப் படத்திலும் அவர் துணை இயக்குனராக பணிபுரிந்து இருந்தார். கடைசியாக அவர் நடித்த ரன் பேபி ரன் திரைப்படம், ரசிகர்களை பெரிய அளவில் இருக்கவில்லை.

இப்படியான சூழலில்தான், ஆர் ஜே பாலாஜிக்கு அடுத்த திரைப்படம் ஆக சிங்கப்பூர் சலூன் வெளியாக இருக்கிறது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படத்தை எடுத்த கோகுல், இதனை இயக்கியுள்ளார். வேல்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. சத்யராஜ் லால் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ஜீவா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் வருகின்றனர். இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள வசனங்கள் அதிகம் கவனம் இருப்பதாக அமைந்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவி நிறுவனம் வெளியிடும் இந்த திரைப்படம், வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

சற்று முன்