- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்த எஸ்வி சேகர் இவர்தானா? - பெண்களை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய மூத்த டைரக்டர்...

அடுத்த எஸ்வி சேகர் இவர்தானா? – பெண்களை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய மூத்த டைரக்டர் ஆர்வி உதயக்குமார் – வலுக்கும் எதிர்ப்பு

- Advertisement -

தமிழ் சினிமாவில் மூத்த இயக்குநர்களில் ஒருவராக மதிக்கப்படுவர ஆர்வி. உதயக்குமார். கடந்த 1990களில் எஜமான், சிங்காரவேலன், சின்னக்கவுண்டர், பொன்னுமணி போன்ற பல ஹிட் படங்களை கொடுத்தவர். இவரது படங்களில் கவுண்டமணி- செந்தில் காமெடி அசத்தலாக இருக்கும். பாடல்கள் பிரமாதமாக இருக்கும். படமும் மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கும்படியாக இருக்கும்.

சின்னக்கவுண்டர் படத்தை பார்த்து அசந்துபோன ரஜினிகாந்த், ஆர்வி உதயக்குமாரை போனில் அழைத்து, இதே மாதிரி எனக்கும் ஒரு கதை ரெடி பண்ணுங்க, என கேட்டுக்கொண்டார். அதன் பிறகே எஜமான் படத்தை, ரஜினியை வைத்து இயக்கினார் ஆர்வி உதயக்குமார். இந்த படமும் பெரிய ஹிட் ஆனது. நடிகை மீனாவும், தமிழ் சினிமாவில் நாயகியாக என்ட்ரி ஆனார்.

- Advertisement -

சமீபத்தில் இயக்குநர் மணிபிரசாத் இயக்கிய என் சுவாசமே என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த படத்தில் புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக மூத்த டைரக்டர் ஆர்வி உதயகுமார் கலந்துக்கொண்டார். இந்த விழாவில் பெண்கள் மற்றும் நடிகைகள் குறித்து அவர் தனது கருத்துகளை வெளியிட்டார்.

ஆர்வி உதயகுமார் விழாவில் பேசியதாவது, இங்கு பேசிய ஒருவர், பெண்ணியம் பேசும் இயக்குநர்களே, பெண்களை ஆபாசமாக காட்டுகிறார்கள் என குறிப்பிட்டார். நான் சொல்கிறேன். பெண்கள், அவர்களே அவுத்துப்போட்டு காட்டுகிறார்கள். ஏன் இப்படி அவுத்துப் போட்டு காட்டுகிறீர்கள் என அவர்களை பார்த்துதான் கேட்க வேண்டும். எப்படி எல்லாம் தெரியும்படி உடை அணிய வேண்டும் என பெண்களே ஆராய்ச்சி செய்கிறார்கள்.

- Advertisement -

தமிழ் சினிமாவை கூட காப்பாற்றி விடலாம். ஆனால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வலைதள பக்கங்களில் போன்றவற்றில் பெண்கள் அவர்களாகவே வீடியோ எடுத்து போடுகிறார்கள். அதனை பார்ப்பவர்களை எப்படி காப்பாற்ற முடியும், என்றும் அவர் அந்த நிகழ்ச்சியில் பேசினார். இது இப்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

நடிகைகள் கவர்ச்சியாக, ஆபாசமாக நடிக்க தானாக முன்வருகிறார்கள். சமூக வலைதள பக்கங்களில் அவர்களாகவே தங்களது ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்கின்றனர். அப்படி இருக்கும்போது டைரக்டர்கள் ஆபாசமாக படம் எடுக்கிறார்கள் என்ற கருத்துக்கான எதிர்ப்பை ஆர்வி உதயக்குமார் பதிவு செய்திருந்தாலும், பெண்களை கொச்சையாக பேசி விட்டார் என ஒரு தரப்பும், அவர் சரியாக உண்மையைதானே பேசியுள்ளார் என ஒரு தரப்பும் கமெண்ட் அடித்து வருகின்றனர். அடுத்த எஸ்வி சேகர் இவர்தாங்க, என்றும் பலர் கிண்டலடிக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்