- Advertisement -
Homeபொழுதுபோக்குமகன்கள் சூர்யா , கார்த்தி இமேஜை டேமேஜ் செய்யும் நடிகர் சிவக்குமார், திருந்தவே மாட்டாரா? -...

மகன்கள் சூர்யா , கார்த்தி இமேஜை டேமேஜ் செய்யும் நடிகர் சிவக்குமார், திருந்தவே மாட்டாரா? – பொது இடத்துல இப்படியா நடத்துக்குவாரு?

- Advertisement -

திரையுலக மார்க்கண்டேன் என்ற பெயர் நடிகர் சிவக்குமாருக்கு அந்த காலத்தில் இருந்தே உள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால், சினிமா உலகில் இருந்தால் ஒழுக்கம், காலம் தவறாமை, உணவு கட்டுப்பாடு, யோகா தியானம், மது, புகை பழக்கம் இல்லை, மற்ற நடிகர்களுடன் தவறான சகவாசம் இல்லை என கட்டுக்கோப்பாக வாழ்பவர்.

நடிகர் சிவக்குமார் என்றாலே மிக கண்ணியமான மனிதர் என்ற பெயர் தமிழ் சினிமாவில் அப்போது இருந்தது. அவர்கள் மகன்கள் சூர்யா, கார்த்தி நடிக்க வந்த பின்பும் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவக்குமார், பிறகு சீரியல்களில் நடித்தார். அதையும் ஒருகட்டத்தில் இருந்த விலகிய நிலையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக அவர் நடிப்பதில்லை.

- Advertisement -

ஆனால் திரைப்பட விழாக்கள், விருது வழங்கும் விழாக்கள், இசை நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் சிவக்குமார் ஆர்வமாக கலந்துக் கொள்கிறார். தன்னுடைய இளமை காலம், நடிக்க வந்த புதிதால் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், ஒரு ஓவியனாக அவர் ஊர் ஊராக கையில் காசே இல்லாமல் பயணித்த நிகழ்வுகளை எல்லாம் சொல்லி வருகிறார்.

உண்மையில் சிவக்குமார் சொல்லும் வாழ்க்கை பாடங்கள், ஒவ்வொரு மனிதரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்களாக, அனுபவ பாடங்களாக இருக்கின்றன. அதுமட்டுமின்றி இலக்கியம், திருக்குறள், ஆன்மிகம், தத்துவம் என பல விஷயங்களை அசத்தும் விதமாக பேசி, மக்களை கவர்கிறார். அதனால் தொடர்ந்து பல நிகழ்வுகளில் பங்கேற்று பேசி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் காரைக்குடியில் உள்ள கண்ணதாசன் மண்டபத்தில் பழ கருப்பையா எழுதிய இப்படித்தான் உருவானேன் என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். விழா முடிந்து மேடையில் இருந்து கீழே இறங்கி வந்த சிவக்குமாருக்கு, வயதான ரசிகர் ஒருவர் பொன்னாடை போர்த்த கையில் சால்வையுடன் நின்றிருந்தார்.

அதைப் பார்த்து ஆவேசமடைந்த சிவக்குமார், அவரது கையில் இருந்த சால்வையை பிடுங்கி, தூக்கி எறிந்துவிட்டு வேகமாக அங்கிருந்து சென்றார். இதைப் பார்த்து அங்கிருந்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். சில ஆண்டுகளுக்கு முன் செல்பி எடுத்த வாலிபரை போனை தட்டி விட்டு பிரச்னை செய்தார் சிவக்குமார். இப்போது சால்வையை பிடுங்கி வீசுகிறார். என்னய்யா, இந்த மனுஷன் பொது இடத்துல இப்படியா நடத்துக்குவாரு, பசங்க பேரை கெடுக்கிறாரே என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்