- Advertisement -
Homeபொழுதுபோக்குதாரை தப்பட்டை படப்பிடிப்பின் போது டைரக்டர் பாலா செய்த சம்பவம், வசமாக சிக்கிக் கொண்ட...

தாரை தப்பட்டை படப்பிடிப்பின் போது டைரக்டர் பாலா செய்த சம்பவம், வசமாக சிக்கிக் கொண்ட டிவி நடிகர் – இது சரிதானா நாயன்மாரே…

- Advertisement -

டைரக்டர் பாலா, தமிழ் சினிமாவில் தனித்துவம் மிக்க ஒரு படைப்பாளியாக கவனிக்கப்படுகிறார். சேது, நந்தா, பிதா மகன், பரதேசி, நான் கடவுள், தாரை தப்பட்டை என அவரது இயக்கத்தில் வந்த பல படங்கள், ஏதேனும் ஒரு விதத்தில் வழக்கமான சினிமா படங்களில் இருந்து மாறுபட்டு இருக்கின்றன. புதிய கதைக்களத்தில் அந்த படைப்புகள் உருவாக்கப்படுகின்றன.

இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்து பின்பு, சேது படம் மூலம் டைரக்டரானவர்தான் பாலா. அவரிடம் அமீர், சசிக்குமார் போன்றவர்களும் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிசெய்திருக்கின்றனர். அதன்பிறகு மெளனம் பேசியதே படத்தில் அமீரும், சுப்ரமணியபுரம் படத்தில் சசிக்குமார் இயக்குனர்களாக மாறிவிட்டனர்.

டைரக்டர் பாலா தனது படங்களில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் உட்பட யாரையுமே மரியாதையாக நடத்த மாட்டார். அவரை பொருத்த வரை தனது படத்தில் அவர்கள் சம்பளம் பெற்றுக்கொண்டு பணிபுரியும் சாதாரண நபர்கள்தான் என்பதுதான் அவரது எண்ணம். அதனால் தனக்கான சுய மரியாதையை எதிர்பார்ப்பவர்கள், பாலா நடவடிக்கையை விரும்ப மாட்டார்கள்.

குறிப்பாக வணங்கான் படத்தில் நடித்த சூர்யாவை, பாலா அவமரியாதை செய்ததால்தான் அவர் விலகினார். நந்தா படத்தில் நடித்த சூர்யா அல்ல அவர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்பதை மறந்து, அவரை கடற்கரையில் சும்மா ஓடவிட்டு டார்ச்சர் செய்திருக்கிறார். பரதேசி படத்தில் நடித்த அதர்வாவை பலமுறை குச்சியால் அடித்திருக்கிறார். பாலா பற்றி தெரியாமல் இந்த படத்தில் நடிக்க வந்துவிட்டேன் என பலரிடமும் புலம்பியிருக்கிறார் அதர்வா.

வணங்கான் படத்தில் நடித்த மலையாள நடிகை மமிதா, சமீபத்தில் பாலா ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னை தோள்பட்டையில் தாக்கியதாக நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக கூறினார். அந்த படத்தில் இருந்தும் அவர் விலகி விட்டார். இப்படி ஒரு மோசமான சம்பவம், விஜய் டிவி நடிகர் அமுதவாணனுக்கு டைரக்டர் பாலா டைரக்ட் செய்த தாரை தப்பட்டை படப்பிடிப்பில் நடந்திருக்கிறது.

தாரை தப்பட்டை படத்தில் நடிக்கச் சென்ற அமுதவாணனிடம், மிமிக்ரி செய்யச் சொல்லி கேட்டிருக்கிறார் டைரக்டர் பாலா. அப்போது அவர் அடிக்கடி தலை முடியை கோதுவதையும், மீசையை தடவுவதையும் கவனித்த பாலா, நாளைக்கு வரும்போது உனக்கு மீசை இருக்க கூடாது. தலைமுடியும் கொஞ்சமாக இருக்கும்படி வெட்டிக்கொண்டு வரவேண்டும் என்று கூறியிருக்கிறார். வேறுவழியின்றி அடுத்த நாள் மீசை இல்லாமல், சட்டித்தலை கிராப்போடு டைரக்டர் பாலா முன் போய் நின்றிருக்கிறார் அமுதவாணன்.

சற்று முன்