கடந்த 2022ம் ஆண்டில் வெளியாக சக்கைப் போடு போட்ட படம் புஷ்பா. 100 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் பான் இந்தியா படமாக, 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் மூவியாக வெற்றி பெற்றது. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த அல்லு அர்ஜூனாவுக்கும் இந்திய அரசின் சிறந்த நடிகர் தேசிய விருதும் கிடைத்தது.
செம்மரக் கடத்தல் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில், லோக்கல் ரவுடியாக, செம்மரக் கடத்தல் சிண்டிகேட் மெம்பராக அல்லு அர்ஜூன் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். படத்தை டைரக்டர் சுகுமாரன் டைரக்ட் செய்திருந்தார்.
படத்தின் சண்டை காட்சிகளும், பாடல் காட்சிகளும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. குறிப்பாக ஆண்ட்ரியா பாடிய ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தாவின் கவர்ச்சி நடனம், ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமியின் குரலில், அய்யா சாமி பாடலும் பெரிய அளவில் டிரண்டிங் ஆனது.
இதையடுத்து, கடந்த இரண்டரை ஆண்டுகளாக புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங் நடந்து வந்த நிலையில், சமீபத்தில்தான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. புஷ்பா 2 படம் ரூ. 440 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. எப்படியும் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் படத்தின் நாயகன் அல்லு அர்ஜூனுக்கும், டைரக்டர் சுகுமாரனுக்கும் தலா ரூ. 100 கோடி சம்பளம் தரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், புஷ்பா 2 படத்துக்கு போதிய வரவேற்பு ரசிகர்களிடம் இல்லை. பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் பாலிவுட் படங்களையே பார்க்க ரசிகர்கள் சமீபமாக ஆர்வம் காட்டுவதில்லை. புஷ்பா 2 பர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கிள் பிரமோக்களும் ரசிகர்களிடம் பெரிய ஆதரவை பெறவில்லை என, தெலுங்கு பட விநியோகஸ்தர்கள், புஷ்பா 2 படத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியிட குறைந்தபட்ச விலையில், தியேட்டர் உரிமம் கேட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இதனால் படக்குழுவினர் நொந்து போயிருந்த நிலையில், புஷ்பா 2 படக்குழுவினரை தெம்பூட்டும் விதமாக புஷ்பா 2 படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் டிஜிட்டல் உரிமம் விலை பேசி ரூ. 250 கோடிக்கும், அதே போல் ஸ்டார் மா டிவி சேட்டிலைட் உரிமம் ரூ. 135 கோடிக்கும் விலை பேசி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ரூ. 440 கோடி படத்தின் பட்ஜெட்டில் இதன்மூலமே 385 கோடி ரூபாய் வரை எட்டிய நிலையில், படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.





