சிவகார்த்திகேயன் தற்போது அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தின் சாய் பல்லவி கதாநாயகியாக வருகிறார். ராணுவ பின்னணியில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரராக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், இதன் டீசரிலேயே தனது உடல் மொழியில் மிரட்டினார்.
இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனி தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். விக்ராந்த், துப்பாக்கி திரைப்பட வில்லன் வித் யூத் என ஏராளமானோர் இந்த படத்தில் இருக்கின்றனர்.
சென்னை தாம்பரம் தூத்துக்குடி திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களில் இதன் சூட்டிங் பணிகள் நடைபெற்றன. அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவி மேக்கர்ஸ் எடுக்கிறது. அனேகமாக அடுத்த மாதத்தில் இந்த படத்தின் சூட்டிங் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்திற்குப் பிறகு மீண்டும் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் சிவகார்த்திகேயன் இணைகிறார். இந்தப் படம் கமர்சியல் எலமெண்ட்களை வைத்து எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது சிவகார்த்திகேயனின் 24 வது திரைப்படமாக உருவாகிறது. இதரைத் தொடர்ந்து அவரின் 25வது படத்தை வெங்கட் பிரபு இயக்குவதாக இருந்தது.
சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை தற்போது இதற்கான பணிகள் கைவிடப்பட்டதாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது. எப்போதுமே தனது கதையின் மையக் கருவையும், அதை எப்படி எல்லாம் எடுக்க போகிறோம் என்பதை மட்டுமே வெங்கட் பிரபு விளக்குவார். இந்த சூழலில் சிவகார்த்திகேயன் அவரிடம் முழு திரைக்கதையையும் கேட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக இருவரிடமும் ஏற்பட்ட அதிருப்தியால் படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திடமும், சிவகார்த்திகேயன் அதிக சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. அது கட்டுப்படி ஆகாது என்று தயாரிப்பு நிறுவனம் கைவிரித்து விட்டதால் படம் டேக் ஆஃப் ஆகாமல் நின்று விட்டது. இந்த சூழலில் தான் தனது 25வது திரைப்படத்தை சுதா கொங்கரா கையில் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இதற்கான சூட்டிங் அக்டோபரில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





