கவுண்டமணி-செந்தில் காம்போ தமிழ் சினிமாவின் மிக முக்கிய நகைச்சுவை காம்போவாக திகழ்ந்தவர்கள். காலம் உள்ளவரை கவுண்டமணி-செந்தில் காம்போ அசத்திய காமெடி காட்சிகள் ரசிகர்களால் ரசிக்கப்படும். இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது கவுண்டமணி-செந்தில் ஆகியோருக்கு இடையே எழுந்த பிரச்சனை குறித்து பதிவு செய்துள்ளார்.

ஒரு முறை கவுண்டமணிக்கும் செந்திலும் ஈகோ பிரச்சனை ஏற்பட, “நான் இல்லாமல் நீங்கள் காமெடி பண்ணிட முடியாது” என்று செந்தில் கூறிவிட்டாராம். இதனால் கடுப்பான கவுண்டமணி, “சரி, இனி நீ தனியா நடி, நான் தனியா நடிக்கிறேன். யார் பெருசுன்னு பார்த்திடலாம்” என கூறிவிட்டாராம்.
இதில் கவுண்டமணி பல திரைப்படங்களில் தனியாக காமெடி செய்து ஸ்கோர் செய்தாராம். ஆனால் செந்தில் தனியாக நடித்த காமெடிகள் எடுபடவில்லையாம். செந்திலுக்கு பல சின்ன சின்ன காமெடி துணை நடிகர்கள் ஆதரவாக நடித்தாலும் செந்திலின் காமெடியை மக்கள் ரசிக்கவில்லையாம். “நாம் தவறு செய்துவிட்டோம்” என்று செந்தில் ஒரு கட்டத்தில் உணர்ந்தாராம்.

ஆனால் ஒரு பக்கம் கவுண்டமணியின் சோலோ காமெடி காட்சிகள் ரசிக்கப்பட்டாலும் ரசிகர்கள் கவுண்டமணி-செந்தில் காம்போவை எதிர்பார்த்தார்களாம். அதன் பின் திரையரங்கு நிர்வாகிகளும் விநியோகஸ்தர்களும் செந்திலிடமும் கவுண்டமணியிடமும் எடுத்து கூறினார்களாம். அதனை தொடர்ந்து கவுண்டமணி-செந்தில் காம்போ மீண்டும் இணைந்தார்களாம். அதன் பின் மீண்டும் அவர்களின் காம்போ ரசிகர்களை ரசிக்க வைத்ததாம். இவ்வாறு செய்யாறு பாலு அப்பேட்டியில் கூறியுள்ளார்.
தற்போது இருவருமே திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்கள். செந்தில் கூட அவ்வப்போது சில திரைப்படங்களில் தலைகாட்டுகிறார். ஆனால் கவுண்டமணி சினிமாவில் இருந்து ஒதுங்கியது போலவே இருக்கிறார்.





