தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நட்சத்திர நாயகியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். வாலி பிரியமானவளே ஏழுமலை நியூ அரசு நேருக்கு நேர் கண்ணெதிரே தோன்றினாள் ஜோடி அவள் வருவாளா ரமணா உள்ளிட்ட பல படங்களில் சிம்ரன் நாயகியாக நடித்திருக்கிறார்.
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா ஆல்தோட்ட பூபதி நானடா பொன்மகள் வந்தாள் போன்ற பாடல்களுக்கு சிறப்பு நடனம் ஆடியவர் சிம்ரன். எந்தவிதமான கேரக்டர் என்றாலும் அதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவார். திருமணத்துக்கு பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த சிம்ரன் மீண்டும் நடித்து வருகிறார்.
நடிகர் பிரசாந்த் நடித்த அந்தகன் சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா போன்ற படங்களில் வில்லி கேரக்டரில் நடித்த சிம்ரன் பிறகு டூரிஸ்ட் ஃபேமிலி பேட்ட போன்ற படங்களில் நல்ல கேரக்டர்களிலும் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். இப்போது ரஜினியுடன் தர்மன் என்ற படத்தில் நாயகியாக சிம்ரன் நடித்து வருகிறார்.
மேலும் நடிகர் ஜெயராம் நடிக்கும் ஒரு படத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகை சிம்ரன் கமிட் ஆகியிருக்கிறார். இதற்கிடையே நடிகை சிம்ரன் வீட்டில் இருந்து ஒருவர் சினிமாவில் என்ட்ரி தர தயாராகி வருகிறார். இப்போது சிம்ரன் நாயகியாக நடித்து வரும் தர்மன் படத்தில் அஸ்வத் மாரிமுத்துவிடம் உதவி இயக்குனராக நடிகை சிம்ரனின் மகன் ஆதிப் பாகா பணிசெய்து வருகிறார்.
இந்த படத்தில் அவர் இயக்குனராக பணிபுரிய காரணம், எதிர்காலத்தில் அவரும் சினிமா இயக்குனராக தொழில் கற்றுக்கொள்ளும் நோக்கமாக இருக்கலாம். அல்லது சினிமாவில் ஹீரோவாகும் உத்வேகத்தில் அவர் படப்பிடிப்பில் உதவி இயக்குனராக பணிபுரியலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் நடிகை சிம்ரனுக்கு தனது மூத்த மகனை ஹீரோவாக்கும் ஆசை இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஏனெனில் அரசியல் வாரிசுகளை போல சினிமா வாரிசுகள் பலரும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து ஜெயித்து வருகின்றனர். அந்த வரிசையில் தனது மகனையும் விரைவில் ஹீரோவாக களத்தில் இறக்க அவர் முடிவு செய்திருப்பதாக லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது.





