- Advertisement -
Homeபொழுதுபோக்குதொடர்ந்து இயக்கத்திலேயே கவனம் செலுத்தும் தனுஷ்... அடுத்ததாக அவரது இயக்கத்தில் நடிக்கும் நாயகன் இவரா... தமிழ்...

தொடர்ந்து இயக்கத்திலேயே கவனம் செலுத்தும் தனுஷ்… அடுத்ததாக அவரது இயக்கத்தில் நடிக்கும் நாயகன் இவரா… தமிழ் திரையுலகம் ஆச்சரியம்…

- Advertisement -

நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, பாடல்கள் எழுதுவது என பல்வேறு துறைகளிலும் ஆர்வம் காட்டி வருபவர் நடிகர் தனுஷ். தமிழ் சினிமா மட்டுமின்றி, தெலுங்கு ஹிந்தி திரையுலகிலும் அவர் கால் பதித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் ஹாலிவுட் திரையுலகிலும் நடித்து பலரது கவனத்தையும் அவர் பெற்றார்.

 

- Advertisement -

தனது திறமையான நடிப்பின் மூலம் இரண்டு முறை தனுஷ் தேசிய விருதை பெற்றிருக்கிறார். ஆடுகளம் படத்தில் கருப்பு கதாபாத்திரத்தில் வாழ்ந்த அவர், அந்த திரைப்படத்திற்கும், அசுரன் படத்திற்கும் விருதை வென்றார். இது ஒரு பக்கம் இருக்க இயக்கத்திலும் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார்.

 

- Advertisement -

அவரது இயக்கத்தில் முதல் திரைப்படம் ஆக, பவர் பாண்டி வெளியானது. ராஜ்கிரண் மற்றும் ரேவதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த அந்த திரைப்படம், விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. காதலை வேறு ஒரு பரிமாணத்தில் காட்சிப்படுத்தி கலங்க வைத்திருந்தார் தனுஷ்.

 

இதன் காரணமாகவே அவர் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தத் திரைப்படம் மிக சுமாராகவே அமைந்தது. குறிப்பாக தனது எழுத்தில் தனுஷ் கோட்டை விட்டதாக பலரும் கூறினர். அதற்கு ஏற்றது போலவே படத்தின் காட்சிகளும் இருந்தன.

 

இருப்பினும் வசூல் ரீதியாக அந்த திரைப்படம் எந்தக் குறையும் வைக்கவில்லை. கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் பணத்தை அந்த திரைப்படம் குவித்ததால் மகிழ்ச்சியில் இருக்கிறார் தனுஷ். தற்போது அவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்கான முதல் பாடலும் அண்மையில் வெளியானது.

 

இந்த திரைப்படத்தை தொடர்ந்து, தனுஷ் அடுத்ததாக பிரகாஷ்ராஜ் மற்றும் நித்யா மேனனை முதன்மை கதாபாத்திரத்தில் கொண்டு ஒரு திரைப்படத்தை இயக்குவதாக கூறப்பட்டது. தற்போது வேறு ஒரு தகவலும் வெளியாகி இருக்கிறது. அதாவது, அருண் விஜயை கதாநாயகனாக வைத்து தனுஷ் ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டு இருக்கிறாராம். இதற்கு நடிகர் தரப்பிலும் சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. படத்தில் தனுஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

- Advertisement -

சற்று முன்