- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் விஸ்வரூபம் எடுத்த ரெட்கார்டு விவகாரம், தேனியில் முகாமிட்ட நடிகர் தனுஷ் - தயாரிப்பாளர் சங்கத்துக்கு...

மீண்டும் விஸ்வரூபம் எடுத்த ரெட்கார்டு விவகாரம், தேனியில் முகாமிட்ட நடிகர் தனுஷ் – தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூச்சி முருகன் கொடுத்த நெருக்கடி

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராயன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அவரது நடிப்பில் உருவான இந்த 50வது படத்தை நடிகர் தனுஷ் அவரே டைரக்ட் செய்து நடித்திருந்தார். ராயன் 165 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இந்த ஆண்டில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த மாஸ் ஹிட் படம் என்பதும் ராயன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராயன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக ராஸ்மிகா மந்தனாவும், முக்கிய கேரக்டரில் நாகார்ஜுனா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை நடிகர் தனுஷ் இயக்கியுள்ளார்.

ராஜ்கிரண் ரேவதி நடிப்பில் தனுஷ் இயக்கிய முதல் படம் ப பாண்டி. இரண்டாவது படம் ராயன், 3வது படம் நிலவுக்கு என்னடி கோபம் ஆகிய படங்களை தொடர்ந்து, மற்றொரு புதிய படத்தையும் தனுஷ் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கிடையே கேப்டன் மில்லர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜா வாழ்க்கை வரலாறு படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. இந்த படத்தில் இளையராஜா கேரக்டரில் நடிகர் தனுஷ் நடிக்கிறார்.

இந்த சூழ்நிலையில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் நடிகர் தனுஷ் மீது ரெட்கார்டு போடப்பட்டிருந்தது. இந்த பிரச்சனையில் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தயாரிப்பாளர் கதிரேசனுக்கு ரூ. 16 கோடி தனுஷ் தருவதாகவும் தயாரிப்பாளர் முரளி ராமசாமிக்கு பழைய படத்துக்கு பதிலாக, புதிய படத்தில் நடித்து தருவதாகவும் பேசி இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணப்பட்டது.

ஆனால் தயாரிப்பாளர் கதிரேசன், தனுஷ் படத்தை முதலில் ஆரம்பித்த வகையில் கடன் மற்றும் வட்டியாக ரூ. 30 கோடி வரை தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் 30 கோடி ரூபாய் தந்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்றும் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் நடிகர் தனுஷ் தனது அடுத்த படத்தில் நடிப்பதற்காக தேனி மாவட்டத்தில் இரண்டு தினங்களாக லொக்கேஷன் பார்க்க முகாமிட்டுள்ளார். அதனால் இந்த ரெட் கார்டு பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி முருகன் தயாரிப்பாளர் சங்கத்திடம் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இப்போது இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கூறிய நிலையில், விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளதால், தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சற்று முன்