- Advertisement -
Homeபொழுதுபோக்குமும்பைக்கு திடீர் விசிட் அடித்த ரஜினிகாந்த்... படப்பிடிப்பிற்காக வந்துள்ளீர்களா என்ற கேள்விக்கு, தலைவர் கொடுத்த பதில்தான்...

மும்பைக்கு திடீர் விசிட் அடித்த ரஜினிகாந்த்… படப்பிடிப்பிற்காக வந்துள்ளீர்களா என்ற கேள்விக்கு, தலைவர் கொடுத்த பதில்தான் மாஸே…

- Advertisement -

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் விக்ராந்த், விஷ்ணு விஷால், கே எஸ் ரவிக்குமார், தம்பி ராமையா, செந்தில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தில் இஸ்லாமியராக சிறப்பு தோற்றத்தில் வருகிறார் ரஜினிகாந்த். இதன் டீசர் தீபாவளியன்று வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. முக்கியமாக டீசரில் ரஜினிகாந்த் பேசும், விளையாட்டில் கூடவா மதத்தை கலப்பீங்க என்ற டயலாக் பலரையும் கவனிக்க வைத்தது. பொங்கலன்று இந்த திரைப்படம் வெளியாகிறது.

- Advertisement -

இதனை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து, ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தையும் லைக்கா நிறுவனமே தயாரிக்கிறது. இதில் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி, மும்பை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. தற்போது சென்னையில் அடுத்த கட்ட சூட்டிங்கை ஞானவேல் எடுத்து வருகிறார். என்கவுண்டரை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறதாம். இதில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் வருகிறாராம்.

- Advertisement -

அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பரபரப்பான ஷூட்டிங்ற்க்கு மத்தியில், திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மும்பை புறப்பட்டு சென்றார். அங்கு செய்தியாளர்கள் படப்பிடிப்பிற்காக வந்துள்ளீர்கள் என்று கேள்வி கேட்க, இல்லை மேட்ச் பார்க்க வந்திருக்கிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப் போட்டி இன்று மும்பையில் நடைபெறுகிறது. நடப்பு தொடரில் ஒன்பது ஆட்டங்களிலுமே இந்தியா வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ளது. தற்போது அரை இறுதியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று இந்தியா வெளியேறியது. தற்போது மீண்டும் அதே அணியுடன் மோத இருப்பதால், எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த போட்டியை காண ரஜினிகாந்த் மட்டுமின்றி முக்கிய நடிகர்கள் பலரும் மும்பை வான்கடே மைதானத்திற்கு படையெடுத்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்