தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம், சந்தோஷ் சுப்பிரமணியம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், பேராண்மை, வனமகன், தனி ஒருவன், போகன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தந்தவர் ஜெயம் ரவி. கடந்த சில ஆண்டுகளாக அவரது படங்கள் பெரிய அளவில் வரவேற்பை தரவில்லை என்றாலும் பொன்னியின் செல்வன் படத்தில் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை, பாராட்டை பெற்றது.
இதைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த அகிலன், இறைவன், சைரன் 108 ஆகிய படங்கள் வெற்றி பெறவில்லை. இப்போது உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா ஸ்டாலின் இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார். இந்த படத்தில் நித்யா மேனன் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
மேலும் ஜெயம் ரவி நடித்த பிரதர் என்ற படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகிறது. இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சிகளில் ஜெயம் ரவி தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இதற்கிடையே கடந்த வாரத்தில் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அவர் வெளியிட்ட பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்ய மனு தாக்கல் செய்து ஜெயம்ரவி அதிரடி காட்டினார்.
இதைத்தொடர்ந்து பாடகி கெனிஷா என்பவருடன் ஜெயம் ரவி நெருக்கமான நட்பில் இருப்பதாகவும், அதனால்தான் தனது மனைவி ஆர்த்தியை அவர் பிரிய முடிவெடுத்தார் என்றும் ஒரு தகவல் வேகமாக பரவியது. ஆனால் இதற்கு பதில் அளித்த நடிகர் ஜெயம் ரவி, கெனிஷா சிறந்த பாடகி. 600க்கும் மேற்பட்ட மேடைகளில் பாடியிருக்கிறார். அவர் ஒரு உளவியலாளர்.
எதிர்காலத்தில் நானும் அவரும் இணைந்து, நோய்களை குணப்படுத்தும் (ஹீலர் சென்டர்) சிகிச்சை மையம் ஒன்றை துவங்கி இருக்கிறோம். எங்கள் குடும்ப பிரச்சனையில் பாடகி கெனிஷா இழுக்காதீர்கள் என்று ஜெயம் ரவி பேசியிருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல் கெனிஷாவும், உண்மை தெரியாமல் இப்படி கற்பனை செய்து வதந்தியை பரப்பாதீர்கள் என்று பதிவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வருகிற தீபாவளிக்கு பிரதமர் படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அந்த படத்தை தொடர்ந்து, காதலிக்க நேரமில்லை படமும் வெளியாக இருக்கிறது. காதலிக்க நேரமில்லை படத்துக்கு ரூ.18 கோடி சம்பளம் வாங்கியுள்ள நடிகர் ஜெயம் ரவி, பிரதர் படம் பெரிய அளவில் வெற்றி பெறும் பட்சத்தில், தனது சம்பளத்தை 25 கோடி வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. குடும்பத்தில் விவாகரத்து, பாடகியுடன் நெருக்கம் என பல விவகாரங்கள் இருந்தாலும், தனது சம்பளத்தை உயர்த்துவதில் ஜெயம் ரவி அதிக கவனம் செலுத்துவது ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





