- Advertisement -
Homeபொழுதுபோக்குசமத்துவ நீதி பேசும் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு அவலம், சிவகார்த்திகேயன் பட இயக்குனர் மீது...

சமத்துவ நீதி பேசும் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு அவலம், சிவகார்த்திகேயன் பட இயக்குனர் மீது எழுந்த புகார் – என்ன கொடும சார் இது?

- Advertisement -

ஆங்கிலேயர்களின் சிக்கியிருந்த இந்த நாட்டை மீட்டதே அவர்களது அடிமைத்தனத்தில் இருந்து மக்களை மீட்க வேண்டும் என்ற உயர்ந்த லட்சியம்தான். ஆனால் இந்தியா சுந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்னும் சக மனிதர்களால் மனிதனுக்கு மனிதனே அடிமையாகும் வாழும் சூழலில் இருந்து சமூகம் இன்னும் மாறவில்லை.

பொருளாதாரம், வசதிகள், அந்தஸ்து, சாதி மதம் உள்ளிட்ட பேதங்களால் மனிதர்களை மனிதர்களே இன்னும் அடிமையாக தான் நடத்தி வருகின்றனர். அதை தான் கலைத்துறை சார்ந்த படைப்பாளிகள், தங்களது படங்கள் மூலம் இந்த அவலங்களை சமூகத்துக்கு தோலுரித்து காட்டுகின்றனர். இதன்பிறகாவது ஏற்ற தாழ்வுகள் நீங்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

சமீபத்தில் நடிகர் விஜய் பேசிய அரசியல் மாநாட்டில் கூட, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறிவிட்டு, மேடையில் பேசும் போது அவர்களே, அவர்களே என்ற மரியாதை மட்டும் தனியாக எதற்கு தர வேண்டும். மேடையில் இருப்பவர்கள், மேடைக்கு முன் இருப்பவர்கள் எல்லாமே ஒன்றுதான், எல்லாமே சமம்தான் என்று ஆவேசமாக பேசினார்.

சினிமா துறையை பொருத்த வரை, ஒரு இயக்குனருக்கு கீழ் பல உதவி இயக்குனர்கள் பணிபுரிகின்றனர். பாரதிராஜாவிடம் பாக்யராஜ் உதவி இயக்குனராக இருந்தார். அவரிடம் பார்த்திபன், பாண்டியராஜன், ஆர்பி விஸ்வம், லிவிங்ஸ்டன் உதவி இயக்குனராக இருந்தனர். விக்ரமனிடம் கேஎஸ் ரவிக்குமார் உதவி இயக்குனராக இருந்தார். அவரிடம் சேரன், ரமேஷ் கண்ணா போன்றவர்கள் உதவி இயக்குனர்களாக இருந்தனர். ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்தான் அட்லி என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு இயக்குனரின் வெற்றியில், உதவி இயக்குனர்களின் பங்கும் நிறைய இருக்கிறது. கதை விவாதத்தில் துவங்கி, படம் ரிலீஸ் ஆகும் வரை உதவி இயக்குனர்களே, படத்துக்கு பக்கபலமாக இருக்கின்றனர். ஆனால் சில இயக்குனர்கள் உதவி இயக்குனர்களை தங்களது அடிமை போல் நடத்துகின்றனர். அவர்கள் முன்னிலையில் உட்கார கூட அனுமதிப்பதில்லை.

இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி கூறுகையில், இதுபோன்ற பண்ணையார் தனம் தமிழ் சினிமாவில் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உதவி இயக்குனர்களை அடிமையாக நடத்தும் போக்கு எந்த இயக்குனராக இருந்தாலும் அது தவிர்க்கப்பட வேண்டும். சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி மீதுதான் அப்படி ஒரு புகார் உள்ளது. அது உண்மையா, பொய்யா எனத் தெரியாது. எனினும் அதுபோன்ற தவறுகளை இயக்குனர்கள் திருத்திக் கொள்வதே நல்லது, என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்