- Advertisement -
Homeபொழுதுபோக்குசவுக்கால் அடித்துக்கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்த நடிகர் எஸ்வி சேகர் - காமெடி நடிகருடன்...

சவுக்கால் அடித்துக்கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்த நடிகர் எஸ்வி சேகர் – காமெடி நடிகருடன் ஒப்பிட்டு கிண்டல்!

- Advertisement -

தமிழக பாஜக தலைவராக இருப்பவர் அண்ணாமலை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக கூறி, இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கோவையில் நடத்தினார். அப்போது பச்சை வேட்டி அணிந்த நிலையில், வெற்று உடம்பில் சாட்டையால் அவர் தன்னைத் தானே அடித்துக்கொண்டார். மேலும் திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்புகள் அணிய மாட்டேன் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து தொடர்ந்து நடிகர் எஸ்வி சேகர் விமர்சித்து வருகிறார். அவர் ஏற்கனவே பாஜகவில் இருந்து பின்னர் அந்த கட்சியை விட்டு விலகியவர். மேலும் எஸ்வி சேகர் ஆயிரக்கணக்கான மேடை நாடகங்களை நடத்தியவர். நூற்றுக்கணக்கான படங்களில் காமெடி ரோலில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.

- Advertisement -

நேர்காணல் ஒன்றில் அண்ணாமலை குறித்து நடிகர் எஸ்வி சேகர் கூறியதாவது, என்னுடைய நாடகம், சினிமாவை பார்த்து யாரும் என்னை சவுக்கால் அடித்துவிடக் கூடாது என்றுதான் நான் நினைப்பேன். அரசியலுக்கு ஒருவர் புதிதாக இருக்கலாம். ஆனால் கோமாளியாக இருக்கக் கூடாது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என இவர் ஏன் சவுக்கால் அடித்துக்கொள்கிறார் என்பது புரியவில்லை.

தமிழ்நாடு சட்டம் ஒழுங்குக்கு அண்ணாமலையா பொறுப்பு? இவர் தமிழ்நாட்டு டிஜிபியா, தமிழ்நாட்டின் முதல்வரா, இவர் அடித்துக்கொள்வதை கோமாளித்தனம் என்றுதான் சொல்ல வேண்டும். அண்ணாமலையின் அரசியலே பூஜ்ஜியம்தான். கடந்த தேர்தலின் போதே 40க்கும் பூஜ்ஜியம்தான் அவருக்கு கிடைத்தது. அவரது வாயில் நாக்கு மட்டும்தான் வேலை செய்கிறது. கட்சி பணி சரியாக செய்யவில்லை.

- Advertisement -

திமுக ஆட்சியை அகற்றும் வரை நான் செருப்பு அணிய மாட்டேன் என்று அண்ணாமலை கூறியிருப்பது கோமாளித்தனத்தின் உச்சக்கட்டம். அப்படி என்றால் அவர் இனிமேல் வாழ்க்கையில் செருப்பே போட முடியாது. நல்ல வேளையாக சட்டை அணிய மாட்டேன், வேட்டி கட்ட மாட்டேன் என்று அவர் சொல்லவில்லை. இல்லை என்றால் டிராயருடன்தான் அவர் அலைய வேண்டும்.

சவுக்கால் அடித்துக்கொள்வதுதான் ஒரு தலைவருக்கு தகுதி என்றால், தமிழ்நாடு பாஜக தலைவராக நடிகர் எம்எஸ் பாஸ்கர்தான் வர வேண்டும். அவர் ஒரு படத்தில் டான்ஸ் ஆடிக்கொண்டே சவுக்கால் அடித்துக் கொள்வார். அது பார்ப்பதற்கு ரொம்பவும் பிரமாதமாக இருக்கும். அண்ணாமலைக்கு டெக்னிக்கலாக கூட சவுக்கால் அடித்துக்கொள்ள தெரியவில்லை என்று எஸ்வி சேகர் விமர்சித்திருப்பது இப்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்