- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் நிறைய காதல் வயப்பட்டிருக்கிறேன், ஆனா… - தனது காதல் அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக பேசிய...

நான் நிறைய காதல் வயப்பட்டிருக்கிறேன், ஆனா… – தனது காதல் அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக பேசிய இயக்குனர் பாலா!

- Advertisement -

கடந்த 1999ம் ஆண்டில் சேது படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர். இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்து தொழில் கற்றவர். தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குனர் பாலா, இதுவரை டைரக்ட் செய்த படங்கள் 10 படங்கள் என்ற எண்ணிக்கையை தாண்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக காதலை மட்டுமே மையப்படுத்திய படங்களை தரும் இயக்குனர்களுக்கு மத்தியில், இயக்குனர் பாலா படங்கள் மிக வித்யாசமானவை. ஆனால் அதே நேரத்தில் அவர் இயக்கிய படங்களில் காதல் இல்லாமல் இருந்தது இல்லை. ஆனால் காதல் உணர்வுகளை மட்டுமே அவரது படங்கள் பேசியது இல்லை.

சேது படத்தில் ஒரு காட்சியில், ஏண்டா இந்த லவ்வையும் பண்ணீட்டு இப்படி தற்கொைலையும் பண்ணிக்கிறாங்களேன்னு எனக்கு தோணும். ஆனா உங்ககிட்ட மாட்டிக்கிட்டு இப்படி கொஞ்சம் கொஞ்சமா சாகறதுக்கு மொத்தமா செத்துடலாம் போல இருக்கே என்று கதாநாயகன் விக்ரம், கதாநாயகியிடம் பேசுவார். இப்படிப்பட்ட ஒரு அழுத்தமான காதல் வசனம் அதுவரை எந்த படத்திலும் வந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே போல் நந்தா படத்தில் சூர்யா லைலா காதல், பிதாமகன் படத்தில் விக்ரம் சங்கீதா காதல் தாரை தப்பட்டை படத்தில் வரலட்சுமி சரத்குமார் சசிக்குமார் காதலை வசன காட்சிகளே அதிகம் இல்லாமல், அவர்களது மன உணர்வுகளை காட்டும் காட்சிகளிலேயே அதை அழகாக சொல்லி இருப்பார் இயக்குனர் பாலா.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் பாலா, காதல் குறித்த ஒரு கேள்விக்கு பதிலளித்து கூறியதாவது, எனக்கு காதல் வந்தது போய்விட்டது. அவ்வளவுதான். காதல் இப்போது எனக்குள் எந்த பாதிப்பையும் தருவதில்லை. எனக்கு அது அந்நியப்பட்டு விட்டது. இனி எல்லாம் வாழ்க்கையில் காதல் என்பது கிடையாது.

என் படங்களில் வரும் காதல் காட்சிகள் வெறும் கற்பனையாக மட்டுமே இருக்கும். சின்ன வயதில் நான் நிறைய காதல் வயப்பட்டிருக்கிறேன். ஆனால் என்னை பார்த்து யாரும் வயப்படவில்லை. ஒரு பெண்ணிடம் நேரடியாக சென்று காதலை சொல்லும் தைரியம் எனக்கு இருந்தது. ஆனால் பர்சனாலிட்டி இல்லை. அதனால் அப்படி எதுவும் நடந்தது இல்லை. காதல் என்றால் அதற்கு பக்குப்பட வேண்டும். சும்மா டீன் ஏஜ் வயதில் நான் காதலிக்கிறேன் என்று சொல்வதெல்லாம் அது காதல் இல்லை என்று பாலா கூறியிருக்கிறார்.

சற்று முன்