- Advertisement -
Homeபொழுதுபோக்குஹீரோயினுடன் போட்டி போட்டு பாடும் சிவகார்த்திகேயன், வெளிவந்தது மாவீரன் படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடல்

ஹீரோயினுடன் போட்டி போட்டு பாடும் சிவகார்த்திகேயன், வெளிவந்தது மாவீரன் படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடல்

- Advertisement -

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் தனது 21 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க, ஜிவி பிரகாஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த “மாவீரன்” திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 14 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இத்திரைப்படத்தை “மண்டேலா” புகழ் மடோன்னே அஸ்வின் இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.

- Advertisement -

பரத் சங்கர் இசையில் “மாவீரன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான “சீனா சீனா” பாடல் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான “வண்ணாரப்பேட்டையில” பாடல் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த பாடலை சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் ஆகியோர் பாடியுள்ளனர். இருவரும் போட்டி போட்டு பாடியுள்ளனர் என்றுதான் கூறவேண்டும். அந்தளவுக்கு ஒரு பெப்பி ஆன பாடலாக இது உருவாகி இருக்கிறது. இதில் சிவகார்த்திகேயன் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார். மேலும் அதிதி ஷங்கரும் மிக வித்தியாசமாக தென்படுகிறார்.

- Advertisement -

இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். மிகவும் அட்டகாசமான வரிகளை கொண்டு உருவாகியுள்ள இப்பாடல் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. “மாவீரன்” திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த “அயலான்” திரைப்படம் வருகிற தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் தற்போது “மாவீரன்” திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது “மாவிரன்” திரைப்படத்தின் “வண்ணாரப்பேட்டையிலே” பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்