- Advertisement -
Homeபொழுதுபோக்குபாலா 25 விழாவில் நான் கலந்துக் கொள்ளாதது ஏன், நடிகை லைலா தந்த விளக்கம் -...

பாலா 25 விழாவில் நான் கலந்துக் கொள்ளாதது ஏன், நடிகை லைலா தந்த விளக்கம் – ஏங்க இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு?

- Advertisement -

மனிதர்கள் வாழ்க்கையில் மறக்க கூடாத ஒரு முக்கியமான விஷயம் குரு பக்தி. அதனால்தான் மாதா பிதாவுக்கு அடுத்த நிலையில் குரு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்க்கையில் ஒரு மனிதன் ஜெயிக்க, ஒரு துறையில் ஜொலிக்க அவர்களுக்கு தூண்டுகோலாய் இருப்பவர், அந்த பயணத்துக்கு வழிகாட்டியவராக குரு இருக்கிறார் என்றால் அது மிகையல்ல.

உச்ச நட்சத்திரங்களால் ஜொலிக்கும் நிலையில் இப்போதும் நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் தங்களது குருநாதர் இயக்குனர் கே பாலசந்தர் குறித்து பேசாமல் இருந்தது இல்லை. அவர் இல்லாமல் இந்த வெற்றியான வாழ்க்கை இல்லை என்பதை எப்போதும் மேடை தோறும் அவர்கள் பேசி வருகின்றனர். இது சிஷ்யர்களாக இருந்து குருவுக்கு ரஜினி கமல் செய்யும் நன்றி கடனாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் 1999ம் ஆண்டில் சேது படம் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. நடப்பாண்டில் அவர் 25 ஆண்டுகளை தமிழ் சினிமாவில் நிறைவு செய்திருக்கிறார். 10க்கும் குறைவான படங்களே அவர் இயக்கி இருந்தாலும் தமிழ் சினிமாவில் மைக் கல்லாக இருக்கும் அவருக்கு பாலா 25 என்கிற பாராட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் நடிகர்கள் சூர்யா சிவக்குமார் அருண் விஜய் உள்ளிட்ட நடிகர்கள் இயக்குனர்கள் பலர் பங்கேற்றனர். ஆனால் பாலா இயக்கத்தில் படங்களில் நடித்த விக்ரம் ஆர்யா அதர்வா லைலா பூஜா உள்ளிட்ட முக்கியமான சிலர் பங்கேற்கவில்லை. ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் தானாகவே இந்த விழாவில் ஆர்வமாக கலந்துக்கொண்டார்.

பாலா இயக்கிய நந்தா பிதாமகன் படங்களில் நாயகியாக நடித்தவர் லைலா. அவரது நடிப்பு இந்த படங்களில் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. அவரது சினிமா பயணத்தில் இந்த படங்கள் மிக முக்கியமானவை. ஆனால் அவர் பாலா 25 விழாவில் பங்கேற்கவில்லை. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை லாலா, பாலா 25 விழாவில் கலந்துக் கொள்ளாதது குறித்து விளக்கம் தந்திருக்கிறார்.

இதுகுறித்து நடிகை லைலா கூறியதாவது, விழாவில் கலந்துக்கொள்ள பாலா, போனில் அழைப்பு விடுத்தார். நானும் விழாவுக்கு வர ஆர்வமாக இருந்தேன். ஆனால் ஏற்கனவே ஒத்துக்கொண்ட தெலுங்கு படத்தில் நடிக்க வேண்டி இருந்தது. அதனால் ஆந்திராவில் இருந்து என்னால் விழாவுக்கு வர முடியவில்லை என்று லைலா கூறியிருக்கிறார். விழாவுக்கு வராமல் தவிர்த்து விட்டு, எப்படி எல்லாம் கம்பி கட்டறாங்க பா என்று ரசிகர்கள் லைலாவை கலாய்த்து வருகின்றனர்.

சற்று முன்