- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர்களை வைத்து படம் இயக்கினால் திரைக்கதைக்கு உண்மையாக இருக்க முடியாது - சூப்பர் ஸ்டார் நடிகர்கள்...

அவர்களை வைத்து படம் இயக்கினால் திரைக்கதைக்கு உண்மையாக இருக்க முடியாது – சூப்பர் ஸ்டார் நடிகர்கள் குறித்து வெளிப்படையாக பேசிய இயக்குனர் ஏஆர் முருகதாஸ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள், அந்த படத்தின் ஹீரோக்களுக்கும் அவர்களது சினிமா பயணத்தில் பெரிய திருப்புமுனையை அந்த படங்கள் ஏற்படுத்தின என்றால் அது மிகையல்ல.

குறிப்பிட்டு சொன்னால் விஜயகாந்த் நடித்த ரமணா, விஜய் நடித்த துப்பாக்கி, சூர்யா நடித்த கஜினி மற்றும் ஏழாம் அறிவு போன்ற படங்கள் இயக்குனர் ஏஆர் முருகதாஸூக்கு மட்டும் பெரிய வெற்றிப் படங்களாக மட்டுமின்றி அந்த ஹீரோக்களுக்கும் பெரிய இமேஜை கொடுத்த படங்களாக இருந்திருக்கின்றன.

- Advertisement -

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் இந்தியில் நடிகர் சல்மான்கான் நடித்த சிக்கந்தர் படம் வருகிற 30ம் தேதி ரிலீஸாக உள்ளது. அதே போல் தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கிய மதராஸி படமும் சில மாதங்களில் திரைக்கு வர இருக்கிறது. இந்த 2 படங்களுமே ஏஆர் முருகதாஸூக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தரும் படங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் படங்கள் குறித்து இயக்குனர் ஏஆர் முருகதாஸ் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, ஒரு காட்சி எப்படி அமைய வேண்டும் என்பதற்கு நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் இடையில் பலவிதமான கருத்துக்கள் இருக்கும். எங்களால் ஒரு முடிவுக்கு வர முடியாத போது நாங்கள் இரண்டு வழிகளில் படப்பிடிப்பை நடத்தி விட்டு எடிட்டிங் செய்யும்போது இறுதி முடிவு எடுத்துக் கொள்வது வழக்கம்.

- Advertisement -

ஒரு சூப்பர் ஸ்டாரை வைத்து வழக்கமான படம் எடுப்பது என்பது சாத்தியமில்லை. ஏனெனில் அந்த படத்தில் ரசிகர்களை கவரும் அனைத்து அம்சங்களும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சூப்பர் ஸ்டாருடன் பணிபுரியும் போது ஒரிஜினல் திரைக்கதைக்கு 100 சதவீதம் உண்மையாக இருக்க முடியாது.

பார்வையாளர்களுக்காக ரசிகர்களுக்காக ஓபனிங் காட்சிக்காக நான் சமரசம் செய்ய வேண்டும். ரசிகர்களை திருப்திப்படுத்த அவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். ரசிகர்களுக்காக சூப்பர் ஸ்டார்கள் மெனக்கெடுவதை பார்த்து நாமும் கற்றுக் கொள்ளலாம் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்