- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமாரின் அடுத்த படத்தை டைரக்ட் செய்வது ஆதிக் ரவிச்சந்திரனா? தயாரிக்கப் போவது மைத்ரி மூவி மேக்கர்ஸ்...

அஜீத்குமாரின் அடுத்த படத்தை டைரக்ட் செய்வது ஆதிக் ரவிச்சந்திரனா? தயாரிக்கப் போவது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமா? – இடியாப்ப சிக்கலா இருக்குதே…

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் இந்த ஆண்டில் 2 படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதில் பிப்ரவரி 6ம் தேதி மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி படம் வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அஜீத்குமார் நடித்த துணிவு படத்துக்கு பின் 2 ஆண்டுகள் கழித்து வெளியான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாமல் ஏமாற்றம் தந்தது.

ஆனால் தொடர்ந்து ஏப்ரல் 10ம் தேதி வெளியான குட் பேட் அக்லி படம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்த படத்தை அஜீத்குமார் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடினர். ஏனெனில் ஏகே ரசிகர்களுக்காக மட்டுமே இந்த படத்தை ஆதிக் டைரக்ட் செய்திருந்தார்.

நடிகர் அஜீத்குமாரின் மிக தீவிரமான ரசிகரான அவர் குட் பேட் அக்லி படத்தில் காட்சிக்கு காட்சி அஜீத்குமாரை புகழ் பாடியிருந்தார். மேலும் அமர்க்களம் வரலாறு தீனா பில்லா வாலி உள்ளிட்ட படங்களை ரெபரென்ஸ் ஆக கொண்டு காட்சிக்கு காட்சி அஜீத்குமாரை வைத்து வேற லெவல் சம்பவமாக படத்தை உருவாக்கி தந்திருந்தார்.

குட் பேட் அக்லி படம் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், நடிகர் அஜீத்குமார் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கப் போவதும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் என 95 சதவீதம் உறுதியாகி விட்டது. இப்போது வெளிநாடுகளில் நடந்துவரும் கார் பந்தயங்களில் பிஸியாக இருக்கும் நடிகர் அஜீத்குமார் வரும் அக்டோபருக்கு பிறகு சென்னை திரும்புகிறார். நவம்பரில் அவரது அடுத்த படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது.

இந்த சூழலில் ஒரு இடியாப்ப சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது அஜீத்குமார் நடிக்கும் அடுத்த படத்தை டைரக்ட் செய்யப் போவது ஆதிக் ரவிச்சந்திரனா அல்லது தயாரிக்கப் போவது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமா என்பதில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு என்றால் ஆதிக் ரவிச்சந்திரன் அந்த படத்தை டைரக்ட் செய்ய மாட்டார்.

அதே போல் ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்டர் என்றால் அந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வராது. ஏனெனில் குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்த போதே மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கும் அவருக்கும் பெரிய பனிப்போரே நடந்திருக்கிறது. பல பிரச்னைகள் மனக்கசப்புகளுக்கு மத்தியில்தான் அந்த படம் எடுத்து முடிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இந்த இருவரில் யாரை ஓகே சொல்வது என்பது அஜீத்குமார் எடுக்கும் முடிவில்தான் உள்ளது.

சற்று முன்