- Advertisement -
Homeபொழுதுபோக்குவானத்தை போல மனம் படைச்ச கேப்டன் விஜயகாந்த், இன்று 2வது ஆண்டு நினைவு நாள்...

வானத்தை போல மனம் படைச்ச கேப்டன் விஜயகாந்த், இன்று 2வது ஆண்டு நினைவு நாள் – உதயநிதி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி!

- Advertisement -

கேப்டன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட திரைப்பட நடிகர் விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

தேமுதிக கட்சியின் நிறுவன தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான திரைப்பட நடிகர் விஜயகாந்த் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி இதே நாளில் உடல் நலக்குறைவால் காலமானார். அப்போது அவருக்கு வயது 71. அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு நாளை குருபூஜை தினமாக தேமுதிக கடைபிடித்து வருகிறது. அந்த வகையில் இன்று தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

கேப்டன் ஆலயம் நினைவிடத்தில் காலை முதலே அரசியல் தலைவர்கள், தேமுதிக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். துணை முதலமைச்சர் ஸ்டாலின் விஜயகாந்த் நினைவிடத்தில் நேரில் வந்து செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் மா சுப்ரமணியன் எவ வேலு உடன் இருந்தனர்.

அடுத்து சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் இருந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும் தமிழ் சினிமா துறையைச் சார்ந்த நடிகர்கள் துணை நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். கேப்டன் நினைவு நாள் குறித்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவு கூர்கிறேன் என்று அதில் மு க ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்

சற்று முன்