- Advertisement -
Homeபொழுதுபோக்குசைக்கோ கில்லர் மிரட்டிய சூப்பர் ஹிட் திரில்லர் திகில் படம் - ராட்சசன் 2 குறித்த...

சைக்கோ கில்லர் மிரட்டிய சூப்பர் ஹிட் திரில்லர் திகில் படம் – ராட்சசன் 2 குறித்த அப்டேட் தந்த நடிகர் விஷ்ணு விஷால்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால். இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அவர் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து குள்ளநரிக் கூட்டம் ஜீவா பலே பாண்டியா நீர்ப்பறவை இன்று நேற்று நாளை ராட்சசன் முண்டாசுப்பட்டி கட்டா குஸ்தி லால் சலாம் உள்ளிட்ட பல படங்களில் விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார்.

நடிகர் விஷ்ணு விஷால் நடிகராக மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பாளராகவும் இருக்கிறார். முதல் மனைவியை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால் பேட்மின்டன் வீராங்கணை ஜூவாலா கட்டா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். சமீபத்தில் இந்த தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு இந்தி நடிகர் அமீர்கான், மிரா என பெயரிட்டுள்ளார்.

விஷ்ணு விஷால் நடித்த படங்களில் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் ராட்சசன். கடந்த 2018ம் ஆண்டில் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அமலா பால் காளி வெங்கட் முனீஸ்காந்த் வினோதினி வைத்யநாதன் நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.

இளம் வயதில் மனநிலை பாதிக்கப்பட்ட சைக்கோ கொலைகாரன் ஒருவன், பள்ளிகளில் மேஜிக் ஷோ நடத்தி மாணவிகளிடம் பழகி, பிறகு அவர்களை ஏமாற்றி வேனில் கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்வதுதான் படத்தின் கதை. இதில் ஹீரோவின் அக்கா மகளையே சைக்கோ கொலைகாரன் கடத்திச் சென்று கொன்று விடுகிறான். காட்சிக்கு காட்சி மிரட்டிய இந்த படம் பெரிய வரவேற்பை பெற்ற க்ரைம் திரில்லர் படமாக இருந்தது.

இதில் போலீஸ் எஸ்ஐ கேரக்டரில் விஷ்ணு விஷால் நடித்திருந்தார். இந்த படத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் சைக்கோ கொலைகாரனை ஹீரோ நெருங்குவது போல இருக்கும். ஆனால் அடுத்த காட்சியில் அது டிவிஸ்ட் ஆக மாறிவிடும். இப்படியே படம் முழுவதும் பல திருப்புமுனை காட்சியமைப்புடன் வெளியான ராட்சசன் படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிக பிடித்தமான ஒரு படமாக அமைந்தது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால் கூறியதாவது, மிக விரைவில் கட்டா குஸ்தி 2 மற்றும் ராட்சசன் 2 ஆகிய படங்களில் நான் நடிக்க இருக்கிறேன். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியிருக்கிறார். குறிப்பாக ராட்சசன் 2 படம் குறித்து அவர் கூறியிருக்கும் அப்டேட் தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சற்று முன்