- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவர் பேரை இதுல இழுத்துவிட்டு களங்கப்படுத்தாதீங்க… சட்டப்படி நான் பார்த்துக்கறேன் - நடிகை வனிதா விஜயகுமார்...

அவர் பேரை இதுல இழுத்துவிட்டு களங்கப்படுத்தாதீங்க… சட்டப்படி நான் பார்த்துக்கறேன் – நடிகை வனிதா விஜயகுமார் மீண்டும் ஆவேசம்!

- Advertisement -

நடிகை வனிதா விஜயகுமார் தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார். இப்போது அவர் டைரக்டராக அறிமுகமாகி உள்ள படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இந்த படத்தில் கதாநாயகியாகவும் அவரே நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்துள்ளார். இந்த படத்தை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தயாரித்திருக்கிறார்.

இந்த படத்தில், நடிகர் கமல்ஹாசன் ரூபிணி ஆடிப்பாடிய ராத்திரி சிவராத்திரி தூக்கம் போச்சு என்ற மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற பாடலை வனிதா விஜயகுமார் பயன்படுத்தி இருக்கிறார். இந்த படத்துக்கு இசை அமைத்தவர் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இளையராஜா, அவர் இசையமைத்த பாடல்களை இப்போதைய படங்களில் பயன்படுத்தினால் பயங்கர அப்செட் ஆகி விடுகிறார். உடனடியாக பல கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்புவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அதனால் முன்னெச்சரிக்கையாக இளையராஜாவை அவரது வீட்டில், தனது மகள் ஜோவிகாவுடன் நேரில் சந்தித்து அனுமதி வாங்கியதாகவும் வனிதா விஜயகுமார் கூறுகிறார்.

ஆனால் ராத்திரி சிவராத்திரி பாடல் விவகாரத்திலும் படத்தின் இயக்குனர் என்ற முறையில் வனிதா விஜயகுமார் மீது இளையராஜா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதுகுறித்து 2 தினங்களுக்கு முன் ஆவேசமாக பேசிய வனிதா விஜயகுமார், இளையராஜா வீட்டுக்கு நான் மருமகளா போயிருக்க வேண்டியவ என்ற ஒரு பகீர் தகவலை வெளிப்படையாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இவர் இப்படி கூறியது பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. அப்படி என்றால் இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜாவுக்கும் வனிதா விஜயகுமாருக்கும் இடையில் திருமண ஏற்பாடுகள் நடந்ததா, இருவரும் காதலித்தார்களா என்றெல்லாம் பலரும் பரபரப்பாக இணையத்தில் பேச ஆரம்பித்து விட்டார்கள். இது ஒரு பேசுபொருளாக மாறி வைரலாகி விட்டது.

இந்நிலையில் வனிதா விஜயகுமார் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, கார்த்திக் ராஜா என்னுடைய நல்ல நண்பர். அவ்வளவுதான். அவரது மனைவியும் எனக்கு நல்ல நண்பர்தான். இந்த விஷயத்தில் கார்த்திக் ராஜா பெயரை இழுத்துவிட்டு களங்கப்படுத்தாதீர்கள். இளையராஜா எனக்கு கடவுளை போன்றவர். அந்த குடும்பத்தில் நான் ஒருத்தி. அவர்களும் என்னை அப்படிதான் பார்க்கின்றனர். இந்த பாடல் பிரச்னையை நான் சட்டப்பூர்வமாக பார்த்துக் கொள்கிறேன் என்று நடிகை வனிதா விஜயகுமார் கூறியிருக்கிறார்.

சற்று முன்