- Advertisement -
Homeபொழுதுபோக்கு7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்தை முடிக்க முடியாமல் திணறும் இயக்குனர் செல்வராகவன் - இப்படி...

7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்தை முடிக்க முடியாமல் திணறும் இயக்குனர் செல்வராகவன் – இப்படி ஒரு சிக்கல் வந்துடுச்சே என புலம்பும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மத்தியில் இயக்குனராக பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர் இயக்குனர் செல்வராகவன். அவர் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் 7ஜி ரெயின்போ காலனி இரண்டாம் உலகம் ஆயிரத்தில் ஒருவன் புதுப்பேட்டை உள்ளிட்ட படங்கள் அதிக கவனம் பெற்றவையாக இருந்தன.

இதற்கிடையே செல்வராகவன் நடிகராகவும் மாறிவிட்டார். பீஸ்ட் பகாசுரன் மார்க் ஆண்டனி ராயன் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்த நிலையில் இப்போது இயக்குனர், நடிகர் என இரண்டு விதங்களிலும் தனது திறமையை அவர் வெளிப்படுத்தி வருகிறார். பகாசுரன் படத்தில் செல்வராகவன் நடிப்பு பெரிய பாராட்டை பெற்றது.

- Advertisement -

செல்வராகவன் இயக்கிய படங்களில் 7ஜி ரெயின்போ காலனி படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படமாகும். இதில் ரவி கிருஷ்ணா ஹீரோவாகவும் சோனியா அகர்வால் நாயகியாகவும் நடித்திருந்தனர். ரெயின்போ காலனி என்ற ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்திய காதல் படமாக இது இருநு்தது.

இந்த படத்தில் நடித்த சோனியா அகர்வாலுக்கும் இயக்குனர் செல்வராகவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டு பின்பு திருமணமும் செய்துக்கொண்டனர். ஆனால் திருமணமான சில ஆண்டுகளில் இருவரும் பிரிந்து விட்டனர். செல்வராகவன் மீண்டும் 2வது திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் சோனியா அகர்வால் மறுமணம் செய்யாமல் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழலில் தற்போது இயக்குனர் செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகம் படத்தை எடுத்து 80 சதவீதம் முடித்துவிட்டார். படத்தின் நாயகன் ரவி கிருஷ்ணா தான். ஆனால் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம், பண நெருக்கடியில் இருப்பதால் அடிக்கடி படப்பிடிப்பு தடைபடுகிறது. இதனால் படப்பிடிப்பை முடிக்க முடியாமல் செல்வராகவன் திணறி வருகிறார். பணம் இருந்தால் மட்டுமே ஷூட்டிங் நடத்தப்படுகிறது.

இதற்கிடையே ஜீவி பிரகாஷ்குமார் நடிக்கும் மெண்டல் மனதில் என்ற படத்தையும் செல்வராகவன் டைரக்ட் செய்து வருகிறார். கெளரி என்ற மலையாள படத்தில் முக்கிய கேரக்டரிலும் செல்வராகவன் நடித்து வருகிறார். இடையிடையே 7ஜி ரெயின்போ காலனி 2 படப்பிடிப்பை நடத்துவது, மெண்டல் மனதில் படப்பிடிப்பை நடத்துவது, கௌரி படத்தில் நடிப்பது என ஏகப்பட்ட நெருக்கடியில் செல்வராகவன் சிக்கிக் கொண்டு திணறிக்கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்