- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமார், தனுஷ் உடன் ஜோடியாக நடிக்க மறுத்த பிரபல நடிகையின் மகள், சூர்யா என்றதும்...

அஜீத்குமார், தனுஷ் உடன் ஜோடியாக நடிக்க மறுத்த பிரபல நடிகையின் மகள், சூர்யா என்றதும் உடனே கிடைத்த பதில் ஓகே – ரொம்ப அசிங்கமா போச்சு குமாரு

- Advertisement -

தமிழ் சினிமாவில் இன்றைய டாப் ஹீரோக்களாக இருப்பவர்கள் ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார் தான். ஏனெனில் இப்போது உள்ள நடிகர்களின் இவர்கள் நடித்த படங்கள் மட்டுமே நஷ்டத்தை தராமல் லாபம் தரக்கூடிய வசூல் நடிகர்களாக இருக்கின்றனர். இவர்கள் நடித்த படங்கள் சரியாக ஓடாவிட்டாலும், லாபம் குறையுமே தவிர நஷ்டம் வராது என்பதுதான் இதில் லாஜிக்.

அப்படிப்பட்ட முக்கிய ஹீரோ நிலையில் இருக்கும் நடிகர் அஜீத்குமார், பிரபல நடிகை ஒருவரின் மகளுடன் நடிக்க ஆசைப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து நடிகையின் மகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய போது, என்னை விட அதிக வயதுள்ள அஜீத்குமாருடன் நான் நடித்தால், பிறகு இளம் ஹீரோக்கள் என்னுடன் நடிக்க விரும்ப மாட்டார்கள். அதனால் அஜீத்துடன் நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

அதே போல் நடிகர் தனுஷ் படத்தில் நடிக்க, தனுஷ் தரப்பில் இருந்து அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதற்கும் பிரபல நடிகையின் மகள் சம்மதிக்கவில்லை. என்னைவிட அவரும் வயதில் மூத்தவர்தான். அதனால் அவருடன் நடிப்பதிலும் எனக்கு விருப்பமில்லை என்று மறுத்து விட்டார்.

இந்நிலையில் இந்தியில் நடிகர் சூர்யா நடிக்கும் கர்ணன் படத்தில் கதாநாயகியாக நடிக்க உடனே சம்மதம் தெரிவித்து இருக்கிறார். நடிகர் சூர்யாவும் 40 வயதுகளை கடந்தவர்தான் என்றாலும் அஜீத்குமார், தனுஷ் ஆகியோருடன் நடிக்க மறுத்த அந்த இளம் நடிகை, ஹீரோ சூர்யா என்றவுடன் ஓகே சொல்லி இருக்கிறார். இதுதான் இப்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

- Advertisement -

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்தான் அவர். போனி கபூர் – ஸ்ரீதேவி தம்பதியின் மூத்த மகளான ஜான்வி கபூர், அஜீத்குமாருடன் நடிக்க அழைக்க காரணம், போனி கபூரை தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக தனது படங்களில் கொண்டு வந்ததே அஜீத்குமார்தான். அதனால், அஜீத்குமாருடன் தனது மகள் ஜான்வி கபூரை நடிக்க வைக்க ஆசைப்பட்டார் போனி கபூர். தந்தை சொல்லியும், அஜீத்குமார் வயதை காரணம் காட்டி, மறுத்துவிட்டார் மகள் ஜான்வி கபூர்.

தனுஷ், ஏற்கனவே மனைவியை பிரிந்து வாழும் நிலையில் அவருடன் நடிப்பதும் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகாது என்ற நிலையில், சூர்யாவுடன் கர்ணன் படத்தில் நடிக்க ஜான்வி கபூர் ஒத்துக்கொள்ள காரணம், அந்த படம் இந்தியில் இயக்கப்படுகிறது. பாலிவுட் நாயகியாக வலம் வருவதே, இந்தி படவுலகை சார்ந்த தனக்கு பெருமை என்று கருதியும் சூர்யாவுடன் நடிக்க சம்மதித்து இருக்கிறார். இப்படி நடிக்க வரும்முன்பே, பல கோணங்களில் யோசிக்கும் ஜான்வி கபூர், எதிர்காலத்தில் ஸ்ரீதேவி போலவே பெரிய ஸ்டாராக வருவார் என்பதற்கான அறிகுறிகள் இப்போதே தெரிகிறது.

- Advertisement -

சற்று முன்