நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பு பல்கலைகழகமாக கொண்டாடப்படுபவர். தமிழ் சினிமாவில் அவர் பொக்கிஷமான ஒரு நடிகராக பார்க்கப்படுகிறார். சிவாஜி கணேசன் இளைய மகன் பிரபு, கடந்த 1990களில் தமிழில் ஒரு முன்னணி நட்சத்திர நடிகராக உலா வந்தார். பல வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தார்.
குறிப்பாக நடிகர் பிரபு நடித்த சின்னதம்பி படம் மாஸ் ஹிட் படமாக தமிழ் சினிமாவில் புகழ் பெற்றது. இப்போதும் நடிகர் பிரபு குணச்சித்திர வேடங்களில் அப்பா அண்ணன் போலீஸ் அதிகாரி கேரக்டர்களில் நடித்து வருகிறார். நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் சினிமாவில் ஹீரோவாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் கும்கி என்ற படத்தில் யானை பாகன் கேரக்டரில் விக்ரம் பிரபு ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் விக்ரம் பிரபு நடித்தாலும் பெரிய அளவில் நட்சத்திர நடிகராக அவர் இன்னும் முன்னணி இடத்துக்கு வரவில்லை. என்றாலும் தொடர்ந்து நல்ல கதைகளை நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான லவ் மேரேஜ் என்ற படம் விக்ரம் பிரபுவுக்கு நல்ல ஒரு கதையம்சம் நிறைந்த ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது. இப்போது நடிகை அனுஷ்காவுடன் காதி படத்தில் முக்கிய கேரக்டரில் விக்ரம் பிரபு நடித்திருக்கிறார். காதி படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது.
இதற்கிடையே நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் விக்ரம் பிரபு கூறியதாவது, கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு வாய்ப்பு தேடி வந்தது. அப்போதே நான் அனுஷ்காவுடன் ஒரு படம் நடித்திருக்க வேண்டும். இயக்குனர் குணசேகர் முதலில் ருத்ரமாதேவி என்ற படத்தில் என்னை நடிக்க அழைத்தார்.
அந்த படத்தில் கோணக் கண்ணா ரெட்டி என்ற கேரக்டரில் என்னை நடிக்குமாறு அவர் கூறினார். ஆனால் மூன்று மாதங்கள் கால்ஷீட் கேட்டார். ஆனால் அந்த நேரத்தில் நான் வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் அந்த படத்தை செய்ய முடியவில்லை. அதற்கு பிறகு அந்த கேரக்டரில் நடிகர் அல்லு அர்ஜூன் நடித்திருந்தார். அந்த கேரக்டரை அவர் சிறப்பாக செய்திருந்தார் என்று நடிகர் விக்ரம் பிரபு கூறியிருக்கிறார்.





