பாலு மகேந்திரா இயக்கத்தில், கதை நேரம் சீரியலில் நடித்தவர் நாராயணன். சினிமாவில் ஏற்கனவே சில நாராயணன்கள் இருந்ததால், நரேன் என தன் பெயரை மாற்றிக்கொண்டார். நரேன் என்ற நடிகரும் இருந்ததால், ஆடுகளம் படத்தில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதால் ஆடுகளம் நரேன் என அவர் மாறிவிட்டார்.
நடிப்பில், பலவித முகபாவனைகளை காட்டி நடிப்பதில் சிறந்த நடிகர் ஆடுகளம் நரேன். பாசமிகு தந்தையாக, மிரட்டும் வில்லனாக, காமெடியாக கூட நடிக்கும் சிறந்த நடிகர். காஜல் அகர்வால் தந்தையாக குட்டில் ஸ்டார் காமெடி பண்ணும் அழகு ராஜா படத்திலும், ஆர்யா தந்தையாக கஜினிகாந்த் படத்திலும் காமெடி செய்திருப்பார் நரேன்.
அதேபோல் ஆடுகளம் படத்தில், சேவல் சண்டை பிரியராக, இன்ஸ்பெக்டர் கேரக்டரிலும், அசுரன் படத்தில் அதிகார ஆணவம் மிக்கவராகவும், சுந்தரபாண்டியன் படத்தில், சசிக்குமாரின் கம்பீரமான தந்தையாகவும் என எல்லாவிதமான நடிப்பிலும், தனி முத்திரை பதித்து வருகிறார். போலீஸ் அதிகாரி வேடம் சிறப்பாக பொருந்தும் நடிகர்களில் இவரும் முக்கியமான ஒருவர்.
சமீபத்தில், ஆடுகளம் நரேன் அளித்த நேர்காணலில் கூறியதாவது, சினிமாவில் எனக்கான கேரக்டர் தரும்போது, அந்த கேரக்டரை இப்படி மாற்றலாம், இப்படி செய்யலாம் என்று எப்போதுமே கூற மாட்டேன். ஆனால், எனக்கான கேரக்டரை இன்னமும் சிறப்பாக எப்படி மாற்றி நடிக்கலாம் என யோசித்து, நல்ல நடிப்பை தருவேன்.
இயக்குநர் வெற்றி மாறன், என் நண்பர். அவர் என்ன கதை பண்ண போறாரு, இப்ப என்ன பண்றாரு, என்ன பண்ணிக்கிட்டு இருக்காருன்னு எல்லாமே எனக்கு நல்லா தெரியும். எனக்கான கேரக்டர் இருந்தால், என்னை அவரே அழைப்பார். விடுதலை முதல் பாகத்தில் நடித்துள்ளேன். அந்த காட்சிகள் 2ம் பாகத்தில் வரலாம். 2ம் பாகத்தில் நடிக்க இன்னும் அழைக்கவில்லை.
நட்பு என்பது வேறு, தொழில் என்பது வேறு. நானாக அவரிடம் எதுவம் கேட்க மாட்டேன். அவராக அழைத்து இந்த கேரக்டரில் நீங்க நடிங்க நரேன், கரெக்டா வரும் என்று சொன்னால், ஒரு கை பார்ததுவிடுவோம் என்றுதான் நடிப்பேன். அவரிடம் நடிப்பதில் சுதந்திரம் ஜாஸ்தியாக இருக்கும். தவறு இருந்தால், சரி செய்து விடுவார், என்று வெளிப்படையாக பேசி இருக்கிறார் நடிகர் ஆடுகளம் நரேன்.





