- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை சுற்றி இருப்பவர்களை விரட்டி விடுவேன், தினமும் அந்த சவாலில் நான் போராடிக்கொண்டு இருக்கிறேன் -...

என்னை சுற்றி இருப்பவர்களை விரட்டி விடுவேன், தினமும் அந்த சவாலில் நான் போராடிக்கொண்டு இருக்கிறேன் – இயக்குனர் வெற்றிமாறன் ஓபன்டாக்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இதுவரை அவர் இயக்கிய படங்களில் விடுதலை 2 படம் மட்டுமே சரியான வரவேற்பை பெறவில்லை. மற்றபடி பொல்லாதவன் ஆடுகளம் விடுதலை வடசென்னை அசுரன் விசாரணை போன்ற படங்கள் மாஸ் ஹிட் அடித்தன. அடுத்து சிம்பு நடிக்கும் அரசன் படத்தை வெற்றிமாறன் டைரக்ட் செய்கிறார்.

சமீபத்தில் மாணவ மாணவியர் கலந்துக்கொண்ட ஒரு விழாவில் பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறன் மேடையில் பேசியதாவது, நான் டைரக்டரான பிறகு ஒரு நாளில் 150 160 170 சிகரட் வரை அடிப்பேன். அதுக்காக வந்து நான் பெருமைப்படவில்லை. எப்பவுமே என்னுடைய செல்ப் டிசிப்ளின் அதாவது சுய ஒழுக்கம் குறித்து நான் கேள்வி எழுப்பிக்கொண்டே இருப்பேன்.

நான் உடற்பயிற்சிகளிலும் ஆர்வம் காட்டவில்லை. அதனால் உடல் நலம் பாதிப்பு என்னை தொடர்ந்தது. மிகவும் இளம் வயதிலேயே இந்த புகை பிடிக்கும் பழக்கத்தை நான் ஆரம்பித்துவிட்டேன். அதனால் 33 வயது 34 வயது காலகட்டத்தில் எனக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. எனக்கு அதனால் உடலில் நிறைய பிரச்னைகளும் வந்தது.

அப்போதுதான் நான் ஒரு முக்கிய முடிவை எடுத்தேன். என்னை வந்து இந்த பழக்கம் லிமிட் பண்ணுகிறது, நான் செய்ய நினைப்பதை செய்ய முடியாமல் என்னை இது தடுக்கிறது என்றால் இது எதுக்கு எனக்கு என்று நான் நினைத்தேன். அதன்பிறகு எனது பயணம் ஆரம்பமானது. நிகோடின் இல்லாத ஒரு புதுமனிதனாக என் வாழ்க்கை பயணம் எனக்கு அதன்பிறகு சுகமாக அமைந்தது.

சிகரட் நமக்கு எளிதாக கிடைக்கிறது என்பதால் அதனுடைய பூதாகரமான பின்விளைவுகள் பாதிப்புகள் நமக்குத் தெரிவதில்லை. ஆனால் அடிமையாகி விட்டால் அதில் இருந்து வெளிவருவது சவாலான விஷயம், அந்த சவாலான விஷயத்தில் இருந்து என் பயணத்தில் நான் மீண்டு வந்தேன். கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி சிகரட் பிடிப்பதில்லை என்று முடிவெடுத்தேன். அன்று முதல் இன்று வரை நான் ஒரு தம் கூட அடிக்கவில்லை.

நான் சிகரட் பிடிக்காதது மட்டுமல்ல, என்னை சுற்றி இருக்கும் யாராவது தம் அடித்தாலும் அவர்களை விரட்டி விடுவேன். அதனால் நிறைய பேர் என்னால் கஷ்டப்படுபவர்களாக இருக்கின்றனர். ஆனால் ஒரே நாளில் ஒரு நிமிடத்தில் இந்த சவாலில் தோற்றுவிட வாய்ப்புள்ளது. அதனால் சிகரட் இனிமேல் கூடாது என்று என் வாழ்க்கையில் நான் தினமும் போராடிக்கொண்டே இருக்கிறேன் என்று இயக்குனர் வெற்றிமாறன் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.

சற்று முன்