தமிழ் சினிமாவில் பல பிரமாண்டமான வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஷங்கர். அதனாலேயே இவருக்கு பிரமாண்ட இயக்குனர் என்ற பெயரும் கோலிவுட்டில் உள்ளது. இந்திய சினிமாவில் முக்கிய கவனம் பெற்ற ஷங்கர் கடந்த 30 ஆண்டுகளில் 15 படங்களை மட்டுமே டைரக்ட் செய்திருக்கிறார்.
அந்த படங்களில் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் என்ற 2 படங்கள் மட்டுமே தோல்வி படங்களாக இருந்தன. மற்ற 13 படங்களும் மாஸ் ஹிட் படங்களாக இருந்தன. அடுத்ததாக வேள்பாரி என்ற வரலாற்று நாவலை படமாக்கும் முயற்சிகளில் ஷங்கர் தீவிரம் காட்டி வருகிறார். இது 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் மிக பிரமாண்டமான படைப்பாக இருக்கும்.
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அதே போல் ஷங்கர் மகனும் சினிமாவில் இப்போது நடித்து வருகிறார். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் வில்லனாக இந்தி பட நடிகர் அனுராக் காஷ்யப் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது வலைதள பக்கத்தில் ஒரு பதிவை செய்திருக்கிறார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, சிறை உண்மையிலேயே ஒரு சிறந்த படம். நான் நிறைய இடங்களில் படம் பார்க்கும்போது கண்ணீர் சிந்தினேன். படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டரும் அதில் நடித்த கலைஞர்களின் நடிப்பும் படம் முடிந்த பிறகும் மனதில் நீங்காமல் நிலைத்து நின்றன.
விக்ரம் பிரபு தனது நடிப்பால் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அக்சய் குமார் அனிஷ்மா அனில் குமார் ஆகியோரது நடிப்பு அவர்களது கதாபாத்திரங்களில் அப்பாவித்தனத்தையும் உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தியது. இந்த அருமையான படத்தை நமக்கு வழங்கிய தயாரிப்பாளர் லிலித்குமாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இயக்குனர் சுரேஷ் தனது முதல் படத்திலேயே நம் மனங்களை சிறை பிடித்து விட்டார்.
சிறை படத்தின் இறுதிக்காட்சியில் சொல்லப்பட்ட செய்தி மிகவும் வலுவானதாகவும் இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமானதாகவும் இருந்தது என்று இயக்குனர் ஷங்கர் சிறை திரைப்படம் குறித்து தனது பதிவில் பாராட்டி இருக்கிறார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்திருக்கிறார். சிறை படத்தில் அவரது மகன் அக்சய் குமார் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





