தமிழ் சினிமாவில் வசந்தபாலன் இயக்கிய வெயில் படம் மூலம் இசையமைப்பாளரான அறிமுகமானவர் ஜீவி பிரகாஷ்குமார். இவர் இசைப்புயல் ஏஆர் ரகுமானின் சொந்த அக்கா மகன் என்பது கூடுதல் தகவல். இப்போது தமிழ் சினிமாவில் நட்சத்திர இசையமைப்பாளராக இருந்து வருகிறார்.
மேலும் படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி நல்ல பாடகராகவும் ஜீவி பிரகாஷ்குமார் இருக்கிறார். இசை அமைப்பது மட்டுமின்றி நடிகராகவும் ஜீவி பிரகாஷ் ஜெயித்திருக்கிறார். நாச்சியார் ஜெயில் குப்பத்து ராஜா உள்பட 25க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக அவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரத்தில் வெளியான யூத் படத்துக்கு இசையமைத்தவர் ஜீவி பிரகாஷ்குமார் தான். நல்ல நடிகராக பாடகராக இசையமைப்பாளராக வலம் வரும் ஜீவி பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளராக இதுவரை 2 முறை தேசிய விருதுகளை வென்றவர். ஆனால் தனது மனைவி சைந்தவியை அவர் விவகாரத்து செய்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் பங்கேற்று பேசினார். அப்போது அவரை நேர்காணல் செய்த தொகுப்பாளர், விக்கி பீடியா பக்கத்தில் உங்களது பழைய போட்டோ உள்ளதை கவனித்தீர்களா என்று கேட்டார். அதற்கு ஜீவி பிரகாஷ்குமார் ஆமாங்க நானும் பார்த்தேன்.
கொம்பன் படத்துக்கு இசையமைத்த சமயத்தில் எடுத்த புகைப்படம் அது. 11 ஆண்டுகள் ஆகி விட்டது. அந்த பழைய படத்தை இன்னும் வைத்துக்கொண்டு இருக்கின்றனர். 2015ல் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம் அது. எப்போது விக்கிபீடியாவை ஓபன் செய்தாலும் அந்த பழைய புகைப்படம்தான் வருகிறது.
அந்த போட்டோவை மாத்துங்க மாத்துங்க என்று பலமுறை நானும் சொல்லி விட்டேன். 11 வருஷமா அந்த பழைய போட்டோவை மாத்தாம என் உயிரை வாங்கறானுங்க. தயவு செஞ்சு அதை மாத்தி தொலைங்கடா என்று நானும் சொல்லிக்கிட்டே தான் இருக்கிறேன். ஆனா மாத்தவே மாட்டேங்கறாங்க என்று ஜீவி பிரகாஷ்குமார் அந்த நேர்காணலில் ஆதங்கமாக பேசியிருக்கிறார்.





