- Advertisement -
Homeபொழுதுபோக்குஉதயநிதியை பார்த்து இதை சொல்வீங்களா மிஸ்டர் செல்லம் - விஜய் குறித்த நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சனத்துக்கு...

உதயநிதியை பார்த்து இதை சொல்வீங்களா மிஸ்டர் செல்லம் – விஜய் குறித்த நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சனத்துக்கு பிரபலம் தந்த பதிலடி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ். சமீபகாலமாக அரசியல் களத்திலும் இருந்து வருகிறார். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சில தினங்களுக்கு முன்பு நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் பங்கேற்று பேசினார்.

அப்போது நடிகனை பார்த்தால் விசில் அடிக்கலாம். ஆனால் நாட்டை கொடுக்க முடியுமா? என்னை போல விஜய் இதுவரை அரசியல் பேசியிருக்கிறாரா? மக்கள் பிரச்சினைக்காக விஜய் குரல் கொடுத்திருக்கிறாரா என்றெல்லாம் அந்த கூட்டத்தில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பி பேசியிருந்தார். இது இணையத்தில் வைரலாகி தளபதி ரசிகர்களை தவெக கட்சியினரை எரிச்சலடைய வைத்தது.

- Advertisement -

நடிகர் பிரகாஷ்ராஜ் விஜய்யுடன் போக்கிரி வில்லு கில்லி சிவகாசி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்தவர். ஜனநாயகன் படத்திலும் நடித்துள்ளார். மேலும் அவர் கர்நாடகாவில் நடந்த ஒரு தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சினிமாவில் நடித்துக்கொண்டே சினிமா நடிகர் ஒருவர் அரசியலுக்கு வந்தது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்து வருவது ரசிகர்கள் மத்தியில் பலத்த கடுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் நடிகராக இருந்த பலரும் இப்போது அரசியல்வாதிகளாக வலம் வருகின்றனர். குறிப்பாக நடிகர்கள் கமல்ஹாசன் சரத்குமார் இப்போது அரசியல்வாதிகளாக இருக்கின்றனர். நடிகர் கருணாஸ், மன்சூர் அலிகான் அரசியல் களத்தில் இருக்கிறார். இப்படி பல நடிகர்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

- Advertisement -

அதேபோல் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த நடிகர் உதயநிதி தான் இப்போது தமிழ்நாட்டின் துணை முதல்வராக இருக்கிறார். அந்த திமுக கூட்டணியில் அங்கம் வைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகர் விஜய் குறித்து பேசி இருப்பது பலருக்கும் எரிச்சலை தந்திருக்கிறது.

இதுகுறித்து சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் தனது எக்ஸ் பதிவில் நடிகர் பிரகாஷ்ராஜை தனது பாணியில் கலாய்த்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ரஜினியும் கமலும் கட்சி ஆரம்பித்து தமிழ்நாட்டை ஆள கிளம்பிய போது இதை பேசுனீர்களா? நடிகராக இருந்த உதயநிதி நாளை முதல்வராகும்போது இதை சொல்வீர்களா மிஸ்டர் செல்லம் என்று ப்ளு சட்டை மாறன் பிரகாஷ்ராஜூக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்