- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்பாட... ஒருவழியா விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ்க்கு தேதி குறிச்சிட்டாங்க... விரைவில் வரப்போகுது அறிவிப்பு... என்ன ஏகே...

அப்பாட… ஒருவழியா விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ்க்கு தேதி குறிச்சிட்டாங்க… விரைவில் வரப்போகுது அறிவிப்பு… என்ன ஏகே ரசிகர்களே கொண்டாடத் தயாரா….

- Advertisement -

துணிவு திரைப்படத்திற்குப் பிறகு அஜித்குமார் இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இதில் முதலில் அவர் ஒப்புக்கொண்ட திரைப்படம் விடா முயற்சி. மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருப்பது நம் அனைவருக்கும் தெரியும். திரிஷா அர்ஜுன் ரெஜினா உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

 

- Advertisement -

அஜர்பைஜான் நாட்டில் கிட்டத்தட்ட ஓராண்டாக இந்த திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் நடைபெற்றன. பேட்ச் ஒர்க் பணிகளை, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் எடுத்தனர். டப்பிங் பணிகளும் அண்மையில் முடிக்கப்பட்டன. சமீபத்தில் இதன் டீசரும் வெளியிடப்பட்டது.

 

- Advertisement -

இதேபோல் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் குறுகிய காலத்தில் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இந்தப் படத்திற்கும், திரிஷா தான் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தெலுங்கு நடிகர் சுனில், பிரசன்னா அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்று இருக்கிறார்கள்.

 

இந்த திரைப்படத்தில் அஜித்தின் லுக்கே வேறு லெவலில் இருக்கிறது. சொல்லப்போனால் அஜித்துக்கு என்று எழுதப்பட்ட அத்தனை கோட்பாடுகளையும் உடைத்துக் கொண்டு இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். அதனை படத்தின் போஸ்டர்களை பார்க்கும்போதே நமக்கு தெரிகிறது. உடல் முழுவதும் டாட்டூ, கலர் கலர் கண்ணாடி என அசத்தலாக காட்சியளிக்கிறார் அஜித்குமார்.

 

தெலுங்கில் முன்னணி நிறுவனமான மைத்திரி மூவிஸ் தான் இதனை தயாரித்து இருக்கிறது. குட் பேட் அக்லி மூலம் அது தமிழ் சினிமாவில் களமிறங்குகிறது. முதலில் இந்த திரைப்படம், பொங்கலுக்கு தான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தன. ஆனால் திடீரென விடாமுயற்சி அன்றைய தினத்தில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டது.

 

இதனால் குட் பேட் அக்லி பின்வாங்க, சொன்னது போல் விடாமுயற்சி திரைப்படமும் களமிறக்கப்படவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகினர். இந்த நிலையில் இந்த மாத இறுதியிலேயே விடாமுயற்சி திரைப்படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முயற்சித்து வருகிறது. அதன்படி வரும் 23ஆம் தேதி விடாமுயற்சி ரிலீஸ் ஆகும் என்றும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியே வரும் என்றும் கூறுகிறார்கள்.

- Advertisement -

சற்று முன்