- Advertisement -
Homeபொழுதுபோக்குகருப்பு படத்தில் ஹீரோ நான் இல்லை, அவர்தான் ஹீரோ - மதுரையில் நடந்த விழாவில் பொடி...

கருப்பு படத்தில் ஹீரோ நான் இல்லை, அவர்தான் ஹீரோ – மதுரையில் நடந்த விழாவில் பொடி வைத்து பேசிய நடிகர் சூர்யா!

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ரெட்ரோ. இந்த படம் கடந்த ஆண்டு மே 1ம் தேதி வெளியானது. அந்த படத்துக்கு பிறகு ஓராண்டு கழிந்து வருகிற மே 14ம் தேதி ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கருப்பு படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடித்துள்ளார்.

மதுரையில் கருப்பு படம் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி பேசியதாவது, கருப்பு படம் பற்றி நிறைய சொல்ல விரும்பலே. கிட்டத்தட்ட 32 மாதங்கள் எழுதியது என்னான்னா முழுக்க முழுக்க இது கமர்சியல் படம். முதல் பாதி ரொம்ப ஸ்ட்ராங்காவும் 2வது பாதி பொழுதுபோக்கு தியேட்டர் அம்சங்கள் நிறைந்தது. நாம பார்க்க ஆசைப்பட்ட சூர்யா சாரை இதில் பார்க்க முடியும்.

படத்தில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஏதாவது ஹை இருக்க வேண்டும். சூர்யா சார் வேற வேற மாதிரி வரவேண்டும் என்று நடனம் சண்டை என எல்லாவற்றையும் செய்திருக்கிறார் என்று இயக்குனர் ஆர்ஜே பாலாஜி கூறியிருக்கிறார். இந்த விழாவில் படத்தில் நாயகியாக நடிகை திரிஷா பங்கேற்கவில்லை என்பது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது.

இவ்விழாவில் கருப்பு படத்தின் நாயகன் நடிகர் சூர்யா பேசியதாவது, கருப்பு திரைப்படம் இந்த அளவுக்கு வந்ததற்கு காரணம் கருப்பசாமி தான் காரணம் என்று நினைக்கிறேன். மனிதன் மீது கடவுள் இறங்கும்போது ஏற்படும் மாற்றத்தை நான் பார்க்கிறேன். நம்பிக்கை இருக்கும் இடத்தில் கண்டிப்பாக அதிசயம் நடக்கும்.

டைரக்டர் ஆர்ஜே பாலாஜி பல திறமைகளை கொண்டவர். நான் என்னை சூர்யாவாக மட்டுமே பார்க்கிறேன். ஆனால் அவர் தன்னை இயக்குனர் நடிகர் வர்ணனையாளராக பார்க்கிறார். இந்த படத்துல நான் ஹீரோ இல்லை. கருப்புசாமி தான் ஹீரோ. படம் பார்த்தவங்க முதல் பாதி ரொம்ப எமோஷனலா இருக்குது, 2வது பாதி தியேட்டர் மொமென்ட்ஸ் அதிகமா இருக்குன்னு சொல்றாங்க.

வருகிற மே 14ம் தேதி உங்க கையில தான் இருக்கு. நிச்சயமா உங்களுக்கு கருப்பு படம் பிடிக்கும். தியேட்டர்ல பார்க்கலாம் என்று நடிகர் சூர்யா அந்த விழாவில் பேசி இருக்கிறார். கருப்பு படத்தில் நடிகர் சூர்யாவை பின்னுக்கு தள்ளி விட்டு வில்லனாக நடித்துள்ள இயக்குனர் ஆர்ஜே பாலாஜி தன்னையே ஹீரோவாக காட்டிக் கொண்டுள்ளதாக ஒரு தகவல் பரவிய நிலையில், அதை தான் நடிகர் சூர்யாவும் படத்தில் ஹீரோ நான் இல்லை என்று கூறிவிட்டாரா என்று ரசிகர்கள் சந்தேகத்தில் உள்ளனர்.

சற்று முன்