- Advertisement -
Homeபொழுதுபோக்கு2024ம் ஆண்டில் வெளியாக வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றிப் படங்கள் இவ்வளவுதானா? இதில் ரி...

2024ம் ஆண்டில் வெளியாக வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றிப் படங்கள் இவ்வளவுதானா? இதில் ரி ரிலீஸ் செய்யப்பட்ட அந்த படங்களும் இருக்குதா?

- Advertisement -

இன்னும் ஒரு வாரமே 2024ம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை தமிழ் சினிமாவில் 250க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் அஜீத்குமார் ஒருவரை தவிர மற்ற முன்னணி நடிகர்கள், 2ம் நிலை 3ம் நிலை நடிகர்களின் படங்களும் வெளியாகி உள்ளன.

இதுதவிர தெலுங்கில் இருந்து தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான லக்கி பாஸ்கர், புஷ்பா 2 போன்ற படங்கள் பெரிய வசூலை தமிழ்நாட்டில் கண்டிருக்கின்றன. தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாக இருந்திருக்கின்றன.

- Advertisement -

அதே போல் மலையாள படங்களான மஞ்சும்மெல் பாய்ஸ் ஆடுஜீவிதம் ஆவேசம் பிரேமலு பிரமயுகம் போன்ற படங்களையும் தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்று அதிக வசூலை தந்துள்ளனர். தெலுங்கு, மலையாள படங்களுக்கு தமிழ் சினிமாவில் கிடைத்த அளவுக்கு தமிழில் வெளியான பெரும்பாலான படங்கள், வந்த சுவடே தெரியாமல் திரையை விட்டு ஒடிவிட்டன.

அந்த வகையில் 2024ம் ஆண்டில் வெளியான படங்களில் வெற்றிப் படங்கள் என்ற வரிசையில் மொத்தம் 20 படங்களே இடம்பிடித்துள்ளன. இதில் விஜய் திரிஷா நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு பின் ரி ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி, 36 ஆண்டுகளுக்கு பின் வெளியான ரஜினி நடித்த தளபதி படமும் உள்ளது.

- Advertisement -

2024ம் ஆண்டில் வெளியாகி வெற்றிப் படங்கள் வரிசையில் இருப்பவை தி கோட் வேட்டையன் அரண்மனை 4 வடக்குப்பட்டி ராமசாமி லவ்வர் ப்ளு ஸ்டார் மகாராஜா ராயன் அந்தகன் ஸ்டார் தங்கலான் டிமாண்டி காலனி 2 லப்பர் பந்து மெய்யழகன் பிளாக் வாழை அமரன் விடுதலை 2 ஆகிய 18 படங்களுடன் கில்லி, தளபதி ரி ரிலீஸ் படங்களும் பெரிய வசூலை தொட்டிருக்கின்றன.

இதில் மகாராஜா ராயன் அமரன் தி கோட் வேட்டையன் அரண்மனை 4 உள்ளிட்ட 8 படங்கள் ரூ. 100 கோடி வசூலை கடந்த படங்களாக இருக்கின்றன. இந்தியன் 2, கங்குவா இந்த 100 கோடி ரூபாய் வசூலை கடந்த படங்களாக இருந்தாலும் இவை இரண்டுமே மிக மோசமான பிளாப் படங்களாக விமர்சன ரீதியாக தோல்வியடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்