தமிழ் சினிமாவில் பெரும்பாலான ஹீரோக்கள் அவர்கள் மட்டுமே கதையின் நாயகனாக அவர்களை மையப்படுத்திய கதைகளில் மட்டுமே நடிப்பார்கள். ஆனால் நடிகர் பிரபுவை பொருத்த வரை அவர் நடிக்க வந்த ஆரம்பத்தில் இருந்தே மற்ற முன்னணி ஹீரோக்களுடன் பாகுபாடின்றி நடித்திருக்கிறார். இன்று வரை அவர் அப்படி தொடர்ந்து நடித்து வருகிறார்.
நடிகர் பிரபு தனது தந்தை சிவாஜி கணேசன் ஹீரோவாக இருந்த போதே அவருடன் சில படங்களில் இணைந்து நடித்தார். பிரபு கோழி கூவுது படத்தில் நடிகர் சுரேஷூம் பிரபுவும் இணைந்து நடித்தனர். நடிகர் ரஜினிகாந்துடன் குரு சிஷ்யன் தர்மத்தின் தலைவன் சந்திரமுகி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அதே போல் நடிகர் கமலுடன் வெற்றிவிழா, வசூல் ராஜா எம்பிபிஎஸ் படங்களில் பிரபு இணைந்து நடித்திருந்தார். நடிகர் கார்த்திக்குடன் அக்னி நட்சத்திரம் நடிகர் சத்யராஜூடன் சின்ன தம்பி பெரிய தம்பி சிவசக்தி அண்ணா நகர் முதல் தெரு போன்ற படங்களில் பிரபு இணைந்து நடித்திருந்தார்.
மேலும் நடிகர் விஜயுடன் தெறி மற்றும் புலி ஆகிய படங்களில் பிரபு நடித்திருக்கிறார். மேலும் நடிகர் சூர்யாவுடன் அயன் படத்தில் பிரபு நடித்திருந்தார். நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த காக்கிச்சட்டை படத்திலும் பிரபு இணைந்து நடித்திருந்தார். இப்படி சீனியர் முதல் ஜூனியர் வரை அனைத்து ஹீரோக்களுடனும் இணைந்து பிரபு நடித்து வருகிறார்.
மேலும் சிறைச்சாலை என்ற படத்தில் நடிகர் மோகன்லாலுடன் பிரபு இணைந்து நடித்திருந்தார். நடிகர் அஜீத்குமாருடன் பில்லா மற்றும் அசல் ஆகிய படங்களிலும் பிரபு இணைந்து நடித்திருந்தார். தனுஷ் நடித்த 3 படத்திலும் பிரபு நடித்திருந்தார். இப்படி பல ஹீரோக்களின் படங்களில் இரட்டை நாயகனாக பிரபு நடித்திருந்தார்.
நடிகர் கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் பிரபு நடித்திருந்தார். ஆனால் இன்றைய ஹீரோக்கள் அஜீத்குமார் விஜய் சூர்யா தனுஷ் சிவகார்த்திகேயன் போன்ற படங்களில் அவர் இணை ஹீரோவாக இல்லாமல் குணச்சித்திர வேடங்களில் சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் இரட்டை ஹீரோவாக அதிகமாக நடித்தவர் பிரபு என்பதும் கவனிக்கத்தக்கது.





