- Advertisement -
Homeபொழுதுபோக்குடபுள் ஆக்குபன்சி பட விழாவில் பொம்மைக்கு வாழ்த்து சொன்ன நடிகை குஷ்பூ - மூத்த மகள்...

டபுள் ஆக்குபன்சி பட விழாவில் பொம்மைக்கு வாழ்த்து சொன்ன நடிகை குஷ்பூ – மூத்த மகள் 6 படங்களில் நடிக்கப் போகிறாரா? – ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சி தம்பதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவிஸ் தயாரிப்பில் உருவான படம் டபுள் ஆக்குபன்சி. இந்த படம் சமீபத்தில் வெளியான நிலையில் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நேற்று நடந்தது.

நடிகர் இயக்குனராக மட்டுமினறி சுந்தர் சி தயாரிப்பாளராகவும் உள்ளார். நடிகை குஷ்புவும் தயாரிப்பாளர்தான். அதே போல் அவர்களது மூத்த மகளும் நடிக்க வந்துவிட்டார். இளைய மகளும் டபுள் ஆக்குபன்சி படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணிசெய்திருக்கிறார். ஏற்கனவே அவர் மணிரத்னம் இயக்கிய சில படங்களிலும் பணிசெய்தது குறிப்பிடத்தக்கது.

டபுள் ஆக்குபன்சி படத்தை நடிகை குஷ்பூ தயாரித்திருந்தாலும் அவரது சார்பில் படத்தின் வேலைகளை கிரியேட்டிவ் வொர்க் கவனித்தது அவரது இளைய மகள் அவந்திகா தான். இந்த நன்றி அறிவிப்பு விழாவில் பங்கேற்ற நடிகை குஷ்பூ பேசியதாவது, நான் இந்த விழாவுக்கு தாமதமாக வந்துள்ளேன். சில நாட்களாக நான் சரியாக தூங்கவில்லை.

வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார் என்று சும்மாவா சொன்னார்கள்? என் மூத்த மகளின் திருமண வேலைகளில் நான் தீவிரமாக இருந்து வருகிறேன். என் கணவர் சுந்தர் சி புருஷன் படத்தின் வேலைகளில் மகள் திருமண வேலைகளில் சுற்றி அலைந்துக்கொண்டு இருக்கிறார். அதனால் அவராலும் இந்த விழாவுக்கு வர முடியவில்லை.

என் இளைய மகள் இந்த பட வேலைகளை சரியாக செய்தார். அவந்திகாவை அனி என செல்லமாக அழைப்பார்கள். நான் பொம்மை என்பேன். என் பொம்மைக்கு வாழ்த்துகள். இந்த பட வேலைகளில் சிக்கல்கள் பிரச்சனைகள் இருந்தது. அதையும் மீறி என் மகள் ஜெயித்தார். என் மூத்த மகள் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அடுத்து நான்கு படங்களில் நடிக்கப் போகிறார்.

முன்பு ஒரு கதாநாயகிக்கு காதல் திருமணம் என்பதைச் சொல்ல பதறுவார்கள். இப்போது எல்லாம் மாறிவிட்டது. ஒரு சின்ன படம் இந்த அளவுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் தயாரிக்கும் படங்கள் மக்களை மகிழ்விக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் பணத்துக்கு தகுந்ததாக இருக்க வேண்டும் என்று சுந்தர் சி சொல்வார். அதை நாங்கள் தொடர்கிறோம் என்று நடிகை குஷ்பூ அந்த விழாவில் பேசினார்.

சற்று முன்